சத்ய ஹரிச்சந்திரா (1965 திரைப்படம்)

சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்: ಸತ್ಯ ಹರಿಶ್ಚಂದ್ರ) என்பது 1965 ல் வெளிவந்த கன்னடத் திரைப்படமாகும். இதனை ஹன்சூர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கே. வி. ரெட்டி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் ராஜ்குமார் இந்து தொன்மவியல் அரசனான அரிச்சந்திரனின் கதாப்பாத்திரத்தினை ஏற்று நடித்திருந்தார்.

சத்ய ஹரிச்சந்திரா
இயக்கம்ஹன்சூர் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. வி. ரெட்டி
மூலக்கதைஹரிச்சந்திர காவியம்
படைத்தவர் ராகவன்கா
திரைக்கதைகே. வி. ரெட்டி
இசைபென்டியாலா நாகேஷ்வர ராவ்
நடிப்புராஜ்குமார்
பண்டரிபாய்
உதயகுமார்
நரசிம்மஹராஜூ
எம். பி. சங்கர்
ராஜசிறீ
ஒளிப்பதிவுமாதவ் புல்புலி
படத்தொகுப்புஜி. கல்யாண சுந்தரம்
டி. ஜி. ஜெயராம்
கலையகம்விஜயா புரொடெக்சன்ஸ்
வெளியீடு1965 (1965)
ஓட்டம்221 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு800,000

ராகவன்கா என்ற பிரபல எழுத்தாளரின் ஹரிச்சந்திர காவியத்தினை மையமாக வைத்து திரைப்படமாக எடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் உதயகுமார், பண்டரிபாய், நரசிம்மஹாரு, எம். பி. சங்கர், கே. எஸ். அஸ்வந்த் மற்றும் பேபி பத்மினி ஆகியோர் துணை நடிகராக நடித்திருந்தனர். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை இப்படத்திற்கு 13வது தேசிய விருதுகளில் கொடுக்கப்பட்டது.[2] இத்திரைப்படம் திரைக்கு வந்த காலங்களில் பெரும் வெற்றி பெற்று கன்னட திரையுலகில் முக்கிய இடம்வகிக்கிறது.[1]

சத்ய ஹரிச்சந்திரா டிஜிட்டல் கலரில் வெளிவந்த இந்திய அளவிலான மூன்றாவது படமாகும். இது ஏப்ரல் 2008ல் வெளியிடப்படு வணிக ரீதியாக வெற்றியடைந்தது.

நடிகர்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 Ashish Rajadhyaksha; Paul Willemen (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-94325-7. http://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA14-PA1985. 
  2. "13th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.

வெளி இணைப்புகள் தொகு