சந்தர்ப்பச்செலவு
நுண்பொருளியலில் பிறவாய்ப்புச் செலவு அல்லது பிறவாய்ப்பு இழப்பு அல்லது சந்தர்ப்பச்செலவு அல்லது அமையச்செலவு (Opportunity cost) என்பது ஒரு குறிப்பிட்ட தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கடுத்த நிலையிலுள்ள தெரிவை இழப்பது ஆகும். அதாவது ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை விட்டுக்கொடுப்பது எனலாம். இது தவறவிட்ட வாய்ப்புகளால் ஏற்படும் இழப்பினைக் குறிக்கிறது.[1]
ஒரு சூழ்நிலையில் ஒருவருக்குப் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் வளப்பற்றாக்குறை காரணமாக அவற்றுள் ஒன்றையே அவரால் தெரிவு செய்ய இயலும். எனவே அவர் அவற்றில் சிறந்ததாகக் கருதுவதையோ அல்லது மிகச் சாதகமானதையோ தெரிவு செய்வார். இதனால் மேலும் பல தெரிவுகளை / வாய்ப்புகளைத் தவற விடுகிறார். இப்படித் தவறவிட்ட வாய்ப்புகளால் அவருக்கு கிட்டக்கூடிய பலன்களை இழக்கிறார். இந்த இழப்பே பிறவாய்ப்பு இழப்பு எனப்படுகிறது. பொருளியலில் இது ஒரு முக்கியமான கூற்றாகும். பற்றாக்குறைக்கும் தெரிவுக்கும் இடையே உள்ள அடிப்படை உறவினை விளக்குகிறது.[2] குறைவான வளங்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.[3]
இலவசப் பண்டங்கள் அல்லாத பொருளாதாரப் பண்டங்களுக்கே அமையச்செலவு காணப்படும். காரணம், இவ் வகையான பண்டங்கள் அருமையாகக் காணப்படுவதும்,மாற்றுப்பயன்பாடு உடையனவாக இருப்பதுவேயாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Opportunity Cost". Investopedia. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
- ↑ James M. Buchanan (2008). "Opportunity cost". The New Palgrave Dictionary of Economics Online (Second). அணுகப்பட்டது 2010-09-18.
- ↑ "Opportunity Cost". Economics A-Z. The Economist. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.