சந்தியா ரங்கநாதன்
இந்திய கால்பந்து வீராங்கனை
சந்தியா ரங்கநாதன் (Sandhiya Ranganathan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை காற்பந்தாட்ட வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இவர் பிறந்தார்.
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
பிறப்பு | 20 மே 1996 |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | கால்பந்தாட்டம் |
இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காகவும், இந்திய மகளிர் கூட்டிணைவுப்போட்டிகளில் சேது கால் பந்தாட்ட சங்க அணிக்காவும் நடுக்கள வீராங்கனையாக இவர் விளையாடுகிறார்.
பன்னாட்டு அரங்கில்
தொகு- 2018 ஆம் ஆண்டு எசுப்பானியாவின் வேலன்சியா நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய கோட்டிப் பெண்கள் கால்பந்து போட்டியில் சந்தியா தனது முதல் கோலை அடித்தார்.[1]
- 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் நாள் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தனது இரண்டாவது கோலை சந்தியா அடித்தார்.[2]
- 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியாவை எதிர்த்து விளையாடிய நேபாள அணிக்கு எதிராக சங்கீதா முக்கியமான ஒரு கோலை அடித்தார்.[3][4]
பன்னாட்டு கோல்கள்
தொகு- இந்திய அணி புள்ளிகளும் முடிவுகளும் .
எண். | நாள் | இடம் | எதிர் அணி | புள்ளிகள் | முடிவு | போட்டி |
---|---|---|---|---|---|---|
1. | 17 மார்ச்சு 2019 | சாகித் ரங்கசலா, பிரத்நகர், நேபாளம் | இலங்கை | 2–0 | 5–0 | 2019 தெற்காசிய பெண்கள் சாம்பியன் |
2. | 6 ஏப்ரல் 2019 | மண்டலார்த்திரி விளையாட்டரங்கம், மண்டலை, மியான்மர் | நேபாளம் | 2–1 | 3–1 | ஆசிய பெண்கள் கால்பந்து கூட்டமைப்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் |
3. | 9 ஏப்ரல் 2019 | மண்டலார்த்திரி விளையாட்டரங்கம், மண்டலை | மியான்மர் | 1–0 | 3–3 | 2020 ஆசிய பெண்கள் கால்பந்து கூட்டமைப்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை - BBC News தமிழ்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ "INDIAN WOMEN CHARGE INTO SAFF SEMIS WITH 5-0 WIN OVER SRI LANKA". www.the-aiff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.
- ↑ "INDIAN WOMEN CLINCH CRUCIAL WIN AGAINST NEPAL IN 2020 OLYMPIC QUALIFIERS ROUND 2". www.the-aiff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.
- ↑ Sportstar, Team. "Uzbekistan holds India to draw in second friendly". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.