சந்திரமதி (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சந்திரமதி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கடம்பூர் இளவரசி மணிமேகலையின் தோழியாவாள்.
சந்திரமதி | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
வகை | வரலாற்று கதைமாந்தர் |
தொழில் | சோழர்குல அரசி |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
தோழர்(கள்)/தோழி(கள்) | மணிமேகலை |
வந்தியத்தேவனின் முகத்தினைக் கண்ணாடியில் கண்ட மணிமேகலைக்கு அது உண்மையா பிரமையா என்று சந்தேகம் வந்தது. வேட்டை மண்டபத்திற்குள் வந்தியத்தேவன் ஒளிந்திருக்கிறானா என்று பார்க்க சந்திரமதியுடன் செல்கிறாள். இருவரும் மாறி மாறி பரிகசித்துக் கொள்கிறார்கள். அங்கிருந்த வாலில்லா குரங்குதான் கண்ணாடியில் தெரிந்தாகப் பரிகசிக்கின்றாள் சந்திரமதி. வந்தியத்தேவன் தன்னை குரங்கு என்று சந்திரமதி கூறியதைக் கேட்டபொழுது தனக்குக் கோபம் வந்ததையும் நிலமை கருதி தான் அமைதியாய் இருந்ததையும் பின்னர் மணிமேகலையுடன் உரையாடுகையில் தெரிவிக்கிறான்.