சந்திரமா தேவி அக்ராஹாரி

சந்திரமா தேவி அக்ரஹரி(Chandrama devi agrahari) இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அமேதி நகர் பேரூராட்சிக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராவார். தொழிலதிபரும் சமாஜ்வாடி கட்சி கட்சித் தலைவருமான இராஜேஷ் அக்ரஹரி இவரது கணவராவார்.[1]

நவம்பர் 2013 இல், இவர் நகரப் பேரூராட்சித் தேர்தலில் அமேதி தொகுதியில் இருந்து சுயாதீன வேட்பாளராக 2085 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்த முகமது லீக் என்ற வேட்பாளரை தோற்கடித்தார். இவர், 2013 தேர்தலில் மொத்தம் 3969 வாக்குகளைப் பெற்றார். ராகுல் காந்தி உறுப்பினராக இருந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் அமேதி நகர் பேரூராட்சியில் தங்கள் வேட்பாளர் லீலா தேவி மூன்றாவது இடத்திற்கு வந்தபோது, ​​காங்கிரஸ் ஒரு அதிர்ச்சி அடைந்தது. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர் சந்திரமா தேவி வெற்றி பெற்றார்.[2] நவம்பர் 2006 முதல் தற்போது வரை, இவர் தற்போதைய தலைவராக உள்ளார். உத்தரபிரதேச மாநில அமேதி நகர் பேரூராட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

சந்திரமா தேவி , 13 பிப்ரவரி 2004 முதல் ராஜேஷ் மசாலா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகவும், ராஜேஷ் மில்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Independents leading in Uttar Pradesh local bodies elections". The Hindu. 7 November 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/independents-leading-in-uttar-pradesh-local-bodies-elections/article3044521.ece. 
  2. "UP civic poll: Cong gets a shock". IBN7. 6 November 2006 இம் மூலத்தில் இருந்து 2014-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222174615/http://ibnlive.in.com/news/up-civic-poll-cong-gets-a-shock/25578-4-2.html. 
  3. "Chandrama Agrahari". 6 February 2014. https://www.zauba.com/director/CHANDRAMA-DEVI-AGRAHARI/01019235. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரமா_தேவி_அக்ராஹாரி&oldid=3242886" இலிருந்து மீள்விக்கப்பட்டது