சந்திராலோகம்
சந்திரா லோகம் ஒரு அணியிலக்கண நூல். மூலநூல் காளிதாசர், சயதேவர் என்னும் இருவரில் ஒருவரால் வடமொழியில் இயற்றப்பட்டது. இதை உரைநடை வடிவில் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் திருத்தணிகையைச் சேர்ந்த விசாகப்பெருமாள் ஐயர் என்பவர். இராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ஐயங்கார் இந்நூலைத் தமிழில் நூற்பா வடிவில் இயற்றினார்.[1].
அமைப்பு
தொகுமுத்துசாமி ஐயங்காரின் சந்திரா லோகம் 126 நூற்பாக்களால் ஆனது. அணியிலக்கணத்தில் பொருளணி, சொல்லணி என்னும் இரண்டில் பொருளணியே சிறப்பானது எனக் கூறும் ஆசிரியர் நூலில் பொருளணி இலக்கணத்தை மட்டுமே கூறியுள்ளார்.
நூறு அணிகளைப்பற்றிக் கூறும் இந்நூல் அந்நூறு அணிகளின் பெயர்களையும் கூறிப் பின்னர் அவற்றின் இலக்கணமும் கூறுகின்றார்.
பதிப்பு
தொகுஇத்தமிழாக்க நூல் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டில் ச. வே. சுப்பிரமணியம் என்பார் சந்திராலோகத்துடன் மேலும் இரண்டு அணியிலக்கண நூல்களும் அடங்கிய தொகுப்பு நூலொன்றை வெளியிட்டார். இந்நூலில் மூன்று நூல்கள் பற்றிய அறிமுகமும் உள்ளடங்கியுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ இளங்குமரன், இரா., 2009. பக். 405.
உசாத்துணைகள்
தொகு- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.