சந்திரிகா காமத்
சந்திரிகா காமத் (Chandrika Kamath) என்பவர் கணினி அறிவியலாளர் மற்றும் தரவு அறிவியலாளர். இவருடைய ஆய்வு அறிவியல் தரவுகளிலிருந்து தகவல் பிரித்தெடுத்தல், எண்ணிம தோற்றுருச் செயலாக்கம், வீடியோ செயலாக்கம், பரிமாணக் குறைப்பு மற்றும் அம்சம் பிரித்தெடுத்தலை உள்ளடக்கியதாகும். இந்தியாவில் கல்வி கற்ற காமத், ஐக்கிய நாடுகளின் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் கணினி பயன்பாட்டு மையத்தில் பணியாற்றி வருகிறார்.[1]:{{{3}}}
கல்வி மற்றும் தொழில்
தொகுகாமத் 1981ஆம் ஆண்டு மும்பை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஆவார். இங்கு இவர் மின் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். காமத் இலினொய் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் 1984-இல் முதுநிலைப் பட்டம் பெற்று தனது முனைவர் பட்டத்தினை 1986-இல் பெற்றார்.[1]:{{{3}}}
எண்ணிம இயந்திர நிறுவனத்தின் மென்பொருட் பொறியியல் உட்படக் கணினித் துறையில் பணிபுரிந்த பிறகு,[1]:{{{3}}} இவர் எண்சார் இணையான அல்காரிதம்களிலிருந்து அறிவியல் தரவுச் செயலாக்கத்தில் தனது ஆய்வினைத் தொடர்ந்தார்.[2]:{{{3}}} தற்பொழுது எல். எல். என். எல்.-இல் அறிவியல் தரவு ஆய்வுக்கான மென்பொருள் கருவியான சபையார் குழுத் தலைவராக உள்ளார்.[3]:{{{3}}}
2008-இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட புள்ளியியல் பகுப்பாய்வு மற்றும் தரவுச் சுரங்க ஆய்விதழின் மூன்று நிறுவன இணை-தலைமை ஆசிரியர்களில் காமத்தும் ஒருவர்.[4]:{{{3}}}
நூல்
தொகுகாமத் அறிவியல் தரவுச் செயலாக்கம்: ஒரு நடைமுறைக் கண்ணோட்டத்தின் (Scientific Data Mining: A Practical Perspective) ஆசிரியர் (தொழில்துறை மற்றும் பயன்பாட்டுக் கணிதத்திற்கான சமூகம், 2009.[5]:{{{3}}}
அங்கீகாரம்
தொகுகாமத் 2023-இல் தொழில்துறை மற்றும் பயன்பாட்டுக் கணிதத்திற்கான சங்கத்தின் சகாவாக நியமிக்கப்பட்டார். "சமூகத் தலைமை மற்றும் தரவுச் செயலாக்கத்திற்கான பங்களிப்புகள் மற்றும் அறிவியல் மற்றும் பொறியியலில் நிஜ உலகப் பிரச்சனைகளின் பயன்பாடு" குறித்த இவரின் ஆய்விற்காக இவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.[2]:{{{3}}}[6]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Chandrika Kamath", People, Lawrence Livermore National Laboratory, பார்க்கப்பட்ட நாள் 2023-04-08
- ↑ 2.0 2.1 LLNL's Kamath honored as 2023 SIAM fellow, Lawrence Livermore National Laboratory, March 30, 2023, பார்க்கப்பட்ட நாள் 2023-04-08
- ↑ Parker, Ann (October 2006), "A gem of a software tool" (PDF), 2006 R&D 100 Awards, Science & Technology Review, Lawrence Livermore National Laboratory, pp. 10–11, பார்க்கப்பட்ட நாள் 2023-04-08
- ↑ "Editorial board", Statistical Analysis and Data Mining, Wiley, பார்க்கப்பட்ட நாள் 2023-04-08
- ↑ Reviews of Scientific Data Mining: Ray Kresman, JASA, வார்ப்புரு:JSTOR; Sang Ho Lee, வார்ப்புரு:Zbl; Antony Unwin, Biometrical J., எஆசு:10.1002/bimj.201000091
- ↑ "SIAM Announces Class of 2023 Fellows", SIAM News, SIAM, March 30, 2023, பார்க்கப்பட்ட நாள் 2023-04-08
வெளி இணைப்புகள்
தொகு- முகப்பு பக்கம்
- சந்திரிகா காமத் publications indexed by Google Scholar