சந்தி (போக்குவரத்து)
சாலை சந்திப்பு அல்லது சந்தி என்பது சாலைகள் சந்திக்கின்ற ஒரு இடம் எனலாம். நுட்பியல் அடிப்படையில், இது வாகனப் போக்குவரத்து வழி மாறவும், திசை மாறவும் கூடிய ஒரு பகுதியாகும்.[1][2][3]
சந்திகளின் வகைகள்
தொகுசந்திகளை உருவாக்கும் சாலைகளில் இருக்கக்கூடிய வாகனப் போக்குவரத்து அளவைப் பொறுத்து சந்திகளின் சிக்கல் தன்மை வேறுபடுகின்றது. வாகனப் போக்குவரத்துக் குறைவான சாலைகள் தொடர்புபடும் சந்திகள் எளிமையானவையாக இருக்கின்றன. இத்தகைய சந்திகளில் சாலைகள் ஒன்றையொன்று ஒரே தளத்தில் இடைவெட்டுகின்றன. இத்தகைய சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும்போது, போகுவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனைத் தடுப்பதற்காக சந்தி அமைப்பில் பல விருத்திகள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாகச் சந்திகளைப் பின்வரும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- இடைவெட்டுச் சந்திகள் (Intersections)
- இடைமாற்றுச் சந்திகள் (Interchanges)
இடைவெட்டுச் சந்திகள் என்பன வீதிகள் நிலமட்டத்தில் ஒன்றையொன்று ஒரேதளத்தில் வெட்டும்போது ஏற்படுகின்றன. இடைமாற்றுச் சந்திகளில் சாலைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் ஒன்றையொன்று கடந்து செல்கின்றன. இவ்விரு வகைச் சந்திகளும் அவற்றின் வடிவமைப்புகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இடைவெட்டுச் சந்திகள்
- சதுரச் சந்தி (Box junction)
- தொடரோட்டம் (Continuous flow)
- குறுக்குச் சாலைகள் (Crossroads)
- Hook turn
- Jughandle
- Michigan left
- சுற்றுச்சந்தி (Roundabout)
- T junction
- Traffic circle
இடைமாற்றுச் சந்திகள்
- குளோவர் இலை (Cloverleaf)
- டயமண்ட் (Diamond)
- Directional T
- Diverging diamond
- Parclo
- Trumpet
- SPUI
- Stack
மேற்கோள்கள்
தொகு- ↑ Hughes, Warren; Jagannathan, Ram; Sengupta, Dibu & Hummer, Joe (April 2010). Alternative Intersections/Interchanges: Informational Report (AIIR) (Report). Federal Highway Administration.
- ↑ Hughes, Warren; Jagannathan, Ram (October 2009). "Double Crossover Diamond Interchange". Federal Highway Administration. FHWA-HRT-09-054. பார்க்கப்பட்ட நாள் April 22, 2012.
- ↑ "Double Crossover Merging Interchange".