சந்த் நிர்மலா

சந்த் நிர்மலா (Sant Nirmala) என்பவர் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞர் ஆவார். சொகமேலாவின் இளைய சகோதரியாக, இவர் தனது சகோதரருடன் சமமாக புனிதமாகக் கருதப்பட்டார், எனவே இவர் ஒரு இந்துத் துறவியாகவும் கருதப்படுகிறார்.[1] நிர்மலா மஹார் சாதியைச் சேர்ந்த பாங்காவை மணந்தார்.[2] இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் சாதி அமைப்பின் விளைவாக இவர் அனுபவித்த அநீதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை விவரிக்கும் அபங்குகளை (மராட்டியத்தின் ஒரு விதமான துதிப்பாடல்கள்) கொண்டுள்ளன.[3]

நிர்மலா உலகத் திருமண வாழ்க்கை குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், பாந்தர்பூர் கடவுளை மகிழ்வித்தார். இவர் தனது கணவரான பாங்காவை தனது கவிதைகளில் ஒருபோதும் குறிப்பிடவில்லை.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Kher, B.G. (1979). "Maharashtra Women Saints". In Swami Ganananda; Steward-Wallace, John (eds.). Women Saints, East & West. Hollywood, Calif.: Vedanta. pp. 61–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0874810361.
  2. Zelliot, Eleanor (2000). "Sant Sahitya and its Effect on Dalit Movements". In Kosambi, Meera (ed.). Intersections: Socio-cultural Trends in Maharashtra. New Delhi: Orient Longman. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125018786.
  3. Ghokale-Turner, Jayashree B. (1981). "Bakhti or Vidroha: Continuity and Change in Dalit Sahitya". In Lele, Jayant (ed.). Tradition and modernity in Bhakti movements. Leiden: Brill. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004063706.
  4. Zelliot, Eleanor (2008). "Chokhamela, His Family and the Marathi Tradition". In Aktor, Mikael; Deliège, Robert (eds.). From Stigma to Assertion: Untouchability, Identity and Politics in Early and Modern India. Copenhagen: Museum Tusculanum Press. pp. 76–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8763507752.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்_நிர்மலா&oldid=3937384" இலிருந்து மீள்விக்கப்பட்டது