சனந்தா (இதழ்)

சனந்தா (Sananda) (IPA: [SHAA-non-DA]) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் ஏ.பி.பி. குழுமத்தால் வெளியிடப்படும் பெங்காலி இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியாகும் பெண்கள் இதழ் ஆகும்.[1][2] வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30 தேதிகளில் இந்த இதழ் வெளியாகும்.

சனந்தா (இதழ்)
Sananda
நிறுவனம்ஆனந்தா வெளியீடு
நாடுஇந்தியா
மொழிபெங்காலி
வலைத்தளம்sananda.in

வரலாறு மற்றும் சுயவிவரம்

தொகு

சனந்தா இதழ் 1986ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[3] இந்த இதழின் முதல் மலர் 31 சூலை 1986இல் வெளிவந்தது.[1] இந்த இதழ் வெளியான உடனே மக்களிடம் வரவேற்பினைப் பெற்றது. இந்த இதழ் பெங்காலி மொழியில் அச்சிடப்படுகிறது.[3] இந்த இதழ் 30,000 பிரதிகளை இலக்காகக் கொண்டிருந்தது. ஆனால் முதல் இதழின் விற்பனை 75,000 ஆக உயர்ந்தது.[4] இதை முதலில் தொகுத்தவர் அபர்ணா சென் ஆவார்.[2] இவருக்குப் பிறகு மதுமிதா சட்டோபாத்யாய் 2005இல் இந்த இதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.[2] இதே ஆண்டு சனந்தா இதழ் தன் ஒடியா பதிப்பைத் தொடங்கியது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Sananda Magazine". Magzter. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 Pritha Mitra (12 December 2005). "Bengali magazine 'Sananda' to don a new look". Afaqs. http://www.afaqs.com/news/story/13556_Bengali-magazine-Sananda-to-don-a-new-look. 
  3. 3.0 3.1 Amrita Madhukalya (19 July 2015). "Of recipes and G-spots: On India's 'magazine era'". dna. http://www.dnaindia.com/lifestyle/report-of-recipes-and-g-spots-on-india-s-magazine-era-2105879. பார்த்த நாள்: 25 September 2016. 
  4. Subroto Sengupta (25 January 2005). Brand Positioning: Strategies for Competitive Advantage. Tata McGraw-Hill Education. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-058159-3.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனந்தா_(இதழ்)&oldid=3687576" இலிருந்து மீள்விக்கப்பட்டது