சனன கருவி மாலை
வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரையில் மேற்கோள் பாடல் குறிப்புடன் தெரியவரும் நூல் இந்த சனன கருவி மாலை (ஜனன கருவி மாலை). [1] இது கரு உருவாதல் பற்றிய அக்கால அறிவியல் கண்ணோட்டம்.
"மற்று விளக்கவுரையில் கூறியன எல்லாம் சனன கருவி மாலையுள் கண்டுகொள்க, ஈண்டு எழுதின் பெருகும் எனக் காட்டிற்றிலம்" - என வெள்ளியம்பலத் தம்பிரான் குறிப்பிடுவதால் இந்த நூலைப்பற்றி அறிய முடிகிறது.
பாடல் - எடுத்துக்காட்டு
தொகு- அன்னை நுகர்ந்ததன் சாரம் பொழுது மூன்றின் ஆம் கருவின் இரதம் அதன் மலம் நீர் கிட்டம்
- பின் இரதத்து உற்ற மலம் மயிரும் தோலும் பேசு திறத்து இறைச்சி இதன் மலங்களாம் தசையின்
- துள்ளி இடும் மேதை மலப் பித்தம் மேதையினில் சூழ் என்பு மலம் நகமாம் என்பின் மச்சை
- மன்னும் மலம் பீளை சுக்கிலத்தை மச்சை மலம் நெய்ப்புச் சுக்கிலம்-தான் வலி பலம் வாதமுமே
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 284.
{{cite book}}
: Check date values in:|year=
(help)