சன்னகா

இந்தோனேசியாவில் மேடாங் இராச்சியத்தை நிறுவிய சஞ்சயனின் தாய்

சன்னகா ( Sannaha) கிபி 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடாங் இராச்சியத்தை நிறுவிய மன்னன் சஞ்சயனின் தாய் ஆவார்.

பின்னணி

தொகு

சன்னகாவைப் பற்றி முதன்முதலில் காங்கல் கல்வெட்டில் (கி.பி 732 தேதியிட்டது) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் படி, இவர் யவத்வீபம் ( [[சாவகம் (தீவு)|சாவகமா] ) மன்னர் சன்னாவின் சகோதரியாவார். புத்திசாலித்தனமும் நல்லொழுக்கமுள்ள சன்னாவின் கீழ் சாவகத் தீவு நீண்ட காலமாக அவரது ஆட்சியின் கீழ் இருந்தது. இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு இராச்சியம் பிளவுபட்டது. வன்முறை மற்றும் குழப்பத்திற்கு மத்தியில், சஞ்சயன் (சன்னகாவின் மகன்) [1] அரியணையில் ஏறி மேடாங் இராச்சியத்தை நிறுவினார்.

சன்னகா மீண்டும் ஒருமுறை கரிதா பராஹ்யங்கனில் (கி.பி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம்) குறிப்பிடப்பட்டுள்ளார், இந்த புத்தகத்தின் படி, இவர் கலிங்க இராச்சியத்தின் ராணி ஷிமாவின் பேத்தியும் கலுவின் இரண்டாவது மன்னரான மண்டிமினியாக்கின் மகளுமாவார். இருப்பினும், இந்த புத்தகம் இவரை காலுவின் மூன்றாவது அரசரான சன்னாவின் மனைவியாக விவரிக்கிறது. சஞ்சயனை (காலுவிற்குப் பின்னர் அரியணை ஏறினார்) சன்னா மற்றும் சன்னகா ஆகிய இருவரின் மகனாகவும் இது விவரிக்கிறது. [2] [3] இந்த புத்தகம் மிகவும் பிற்காலத்தில் இயற்றப்பட்டதால், சன்னாவுக்கும் சன்னகாவுக்கும் உள்ள உறவு காதல் மயப்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். ஆயினும்கூட, நபர்களின் பெயர் மற்றும் கருப்பொருள் வரலாற்று காங்கல் கல்வெட்டுடன் ஒத்துப்போகிறது, இது கையெழுத்துப் பிரதி வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் அல்லது ஈர்க்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Sejarah (in இந்தோனேஷியன்). Grasindo. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-732-530-5.
  2. Iguchi, Masatoshi (2015-01-28). Java Essay: The History and Culture of a Southern Country (in ஆங்கிலம்). Troubador Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78462-151-3.
  3. Soekmono, R. (2002). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2 (in இந்தோனேஷியன்). Kanisius. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-413-290-6.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னகா&oldid=3650008" இலிருந்து மீள்விக்கப்பட்டது