சபரி (திரைப்படம்)
சபரி மார்ச் 20, 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை சுரேஷ் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களாக விஜயகாந்த், ஜோதிர்மயி, மாளவிகா, மகாதேவன், ராஜஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
சபரி | |
---|---|
இயக்கம் | சுரேஷ் |
தயாரிப்பு | சலீம் சந்திரசேகர் |
கதை | சுரேஷ் |
திரைக்கதை | பட்டுக்கோட்டை பிரபாகரன் |
இசை | மணி சர்மா |
நடிப்பு | விஜயகாந்த் ஜோதிர்மயி மாளவிகா மகாதேவன் ராஜஸ்ரீ |
ஒளிப்பதிவு | முரளி |
சண்டைப் பயிற்சி | றொக்கி ராஜேஸ் |
வெளியீடு | 2007 |
ஓட்டம் | நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காவல்துறையின் தேடுதல் வேட்டை ஒன்றின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகித் தப்பி வரும் குற்றவாளி ஒருவனுக்கு அவசர சிகிச்சை செய்கிறார் மருத்துவர் சபரி (விஜயகாந்த்). அதன் பின்னர், குற்றவாளியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறார். இதனால் கோபமுற்ற குற்றவாளியின் கும்பல், சபரியை பழி தீர்க்க ஆயத்தமாகிறது. அதன்பின், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் போரே திரைக்கதையாகும்.
நடிகர்கள்
தொகுநடிகர்கள் | பாத்திரம் |
---|---|
விஜயகாந்த் | மருத்துவர் சபரிநாதன் |
ஜோதிர்மயி | |
மாளவிகா | |
மகாதேவன் | |
ராஜஸ்ரீ |
பாடல்
தொகுஇப் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
பாடல் | பாடியவர்கள் |
---|---|
ஓசாமா ஓசாமா | ஏ.வீ. ரமணன், ரஞ்சித், நவீன் |
ஆவன்னா அக்கன்னா | திப்பூ, சுஜாதா |
ஒருமுறை சொன்னால் | நவீன், பார்கவி |
ஆலய மணி | கலயாணி மேனன் |
ஓம் என்னும் | ரஞ்சித், நவீன், ராகுல் நம்பியார் |