சப்தம் (நடனம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சப்தம் ஜதி ஸ்வரத்திற்கு அடுத்தபடியாக பரத நாட்டியத்திலும் வரும் உருப்படி ஆகும். ஒரு நடன நிகழ்ச்சியில் முதலாவதாக பாவம் தொடங்குவது இவ் உருப்படியில் தான். சப்தம் என்றால் சொல் என்று பொருள். சப்தத்தில் அர்த்தம் நிறைந்த சாகித்தியமும் சிறு ஜதிக் கோர்வைகளும் இணைந்து வரும். சாதாரணமாக மிஸ்ர சாபு தாளத்தில் ராகமாலிகையில் அமைந்திருக்கும். பாடல்களின் கருத்துக்கள் கிருஸ்ண லீலை, சிவபெருமான் அல்லது முருகனின் ஆற்றலை, பெருமையை விளக்குவதாக அமைந்திருக்கும். சில சப்தங்கள் பராக் அல்லது சலாமுரே என்று முடியும்.