சப்பரம் என்பது இந்து சமய கோயில்களில் இறைவன் உலா வருகின்ற வாகனமாகும். [1]

வாகன அமைப்பு தொகு

கனமற்ற கூரையைத் தாங்கி, நான்கு தூண்களைக் கொண்ட ஒரு எளிய மேடையாக இந்த வாகனம் வடிவமைக்கப்படுகிறது. விமான வாகனத்தில் கூரை அமைப்பிற்கு மேல் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். [1]

சப்பரத்தின் தூணில் இறைவனை அலங்கரிக்க உபயோகிக்கப்படும் மலர்கள் மற்றும் ஆபரணங்களுக்கு ஏற்ப துணியின் நிறத்தை தேர்ந்தெடுத்து சுற்றுகின்றனர். சிகப்பு, வெள்ளை, பச்சை நிற துணிகளை பொதுவாக சுற்றுகின்றனர். [1]

தங்கச் சப்பரம், வெள்ளிச் சப்பரம், ஓலைச் சப்பரம், மரச்சட்டச் சப்பரம் போன்ற வகைகளிலும், பச்சை கடைசல் சப்பரம், சப்தாவர்ண சப்பரம், தங்கமயில் சப்பரம், பவளக்கால் சப்பரம், ஆயிரம் பொன் சப்பரம் போன்ற வடிவங்களில் உள்ளது.

பெயர்கள் தொகு

சப்பரத்தினை ஒவ்வொரு கோயிலும் அதன் தனித்துவத்தின் படி பெயரிட்டு அழைக்கின்றனர். நாங்குநேரி தோத்தாதிரிநாதனின் கோவில் சப்பரத்தின் உள்ளே கண்ணாடி கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதைக் கண்ணாடி சப்பரம் என அழைக்கின்றனர்.[1]

கோயில்களில் உலா நாட்கள் தொகு

  • நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உற்சவ 7ம் திருநாளில் தங்கசப்பரத்தில் உலா நடைபெறுகிறது. [2]
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உலா நடைபெறுகிறது. [3]
  • மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர், ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றில் இறங்குவார்.

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 73 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
  2. "நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்க சப்பரம் வீதியுலா". Dinamalar.
  3. "மதுரை வெளி வீதிகளில் நாளை அஷ்டமி சப்பரம்". Dinamalar.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பரம்&oldid=3799766" இலிருந்து மீள்விக்கப்பட்டது