சப்பானியக் கட்டிடக்கலை
சப்பானியக் கட்டிடக்கலை என்பது, சப்பானிய மக்களின் கட்டிடக்கலையைக் குறிக்கும். சப்பானியப் பண்பாட்டின் பிற அம்சங்களைப் போலவே சப்பானியக் கட்டிடக்கலையும் மிக நீண்ட வரலாறு கொண்டது. தொடக்கத்தில் இக் கட்டிடக்கலை சீனாவின் தாங் வம்சக் கட்டிடக்கலையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. எனினும், இது தனக்கே உரிய தனித்துவமான, சப்பானியரின் உள்ளூர்ப் பண்பாட்டு அம்சங்களையும் வேறுபாடுகளையும் உள்ளடக்கியதாக வளர்ச்சியடைந்தது.