சப்பானியக் கோட்டையகம்

சப்பானியக் கோட்டையகம் என்பது மரத்தையும் கற்களையும் முதன்மையாகக் கொண்டு கட்டப்பட்ட கோட்டைகள். ஐரோப்பியக் கோட்டையகங்களைப் போன்று இவையும் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஆற்றுப் பாதைகள், தரைவழிப் பாதைகள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டவையாகும்.

இயோகோ மாகாணத்தில் உள்ள இமேச்சி கோட்டைமனை. இதுவே நிப்பானில் அதிகம் பார்வையிடப்படும் கோட்டைமனை

இவை நீடித்திருப்பதற்காக கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக மரமே கட்டுமானப் பொருளாக இருந்தன. எனவே இவற்றில் பல காலப்போக்கில் அழிந்து விட்டன. செஞ்சோக்கு காலத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட பல கோட்டையகங்கள் இதில் அடங்கும். பிற்கால செஞ்சோக்கு காலத்திலும் இதோ காலத்திலும் இவை மீண்டும் கட்டப்பட்டன. இவை தற்காலத்தில் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டு விட்டன. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கோட்டைமனைகள் உள்ளன. ஒரு காலத்தில் நிப்பானில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கோட்டைமனைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.[1][2][3]

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Inoue, Munekazu (1959). Castles of Japan. Tokyo: Association of Japanese Castle.
  2. DK Eyewitness Travel Guide: Japan. London: DK Publishing. 2002.
  3. "🏯 Japanese Castle Emoji". Emojipedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானியக்_கோட்டையகம்&oldid=3893809" இலிருந்து மீள்விக்கப்பட்டது