சப்பான் உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் வேளாண் வேதியியல் சங்கம்
சப்பான் உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் வேளாண் வேதியியல் சங்கம் (Japan Society for Bioscience, Biotechnology, and Agrochemistry) என்பது சப்பான் நாட்டின் உயிரியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் வேளாண் வேதியியல் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அறிவியல் சமூகம் ஆகும். 1924 ஆம் ஆண்டில் சப்பான் வேளாண் இரசாயன சங்கமாக இச்சங்கம் நிறுவப்பட்டது. த்ற்போதைய பெயர் 1989 ஆம் ஆண்டில் சூட்டப்பட்டது.
1957 ஆம் ஆண்டில், சப்பானின் கல்வி, அறிவியல், விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக ஒரு சமூகமாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போதைய உறுப்பினர்களில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Organizations and Activities". Japan Society for Bioscience, Biotechnology, and Agrochemistry. பார்க்கப்பட்ட நாள் 2010-08-19.