சமகாலிகா மலையாள வாரிகா
மலையாள செய்தி வலைத்தளம்
சமகாலிகா மலையாள வாரிகா (Samakalika Malayalam Vaarika) என்பது மலையாள மொழி செய்தி வலைத்தளம் ஆகும். தி நியூ இந்தியன் எக்சுபிரசு நாளிதழ் இதனை வெளியிடுகிறது. வாராந்திர செய்தித்தாளாக வெளிவரும் இது, கேரளாவின் கலாச்சார மற்றும் அரசியல் துறையில் ஒரு முன்னணி குரலாகும்.
ஆசிரியர் | சாஜி ஜேம்ஸ் |
---|---|
முன்னாள் இதழாசிரியர்கள் | எஸ். ஜெயச்சந்திரன் நாயர்[1] |
வகை | கலாச்சார இதழ் |
இடைவெளி | வாரந்தோறும் |
வெளியீட்டாளர் | தி நியூ இந்தியன் எக்சுபிரசு குழுமம் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வலைத்தளம் | www |
வரலாறு.
தொகு1997 மே மாதம் வார இதழ் தொடங்கப்பட்டபோது மூத்த பத்திரிகையாளர் எஸ். ஜெயச்சந்திரன் நாயர் இதன் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் 2012 வரை அந்த பதவியில் தொடர்ந்தார். தற்போது, அதன் ஆசிரியர் சாஜி ஜேம்ஸ் தலைமையிலான குழுவால் இது வழிநடத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் மலையாள இதழியலில் புகழ்பெற்ற டி. ஜே. எஸ் ஜார்ஜ் ஆசிரியர் குழுவில் ஆலோசகராக உள்ளார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malayalam weekly editor Jayachandran Nair resigns". Mathrubhumi. 21 June 2012. http://www.mathrubhumi.com/english/news/media/malayalam-weekly-editor-jayachandran-nair-resigns-125183.html.
- ↑ "about us". Samakalika Malayalam. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.