சமச்சீர் திறவுகோல் வழிமுறை

வழிமுறை

சமச்சீர் திறவுகோல் வழிமுறை (Symmetric-key algorithms) என்பது மறையீட்டியலில் பயன்படுத்தப்படும் ஒரு படிமுறைத் தீர்வு ஆகும். அதாவது இங்கு ஒரே வகையான மறையீட்டியல் திறவுகோல்கள் சாதாரண எழுத்துக்களை மறையாக்கம் செய்யவும் மறையாக்கப்பட்ட எழுத்துக்களை மீண்டும் சாதாரண எழுத்துக்களாக மாற்றவும் பயன்படும்.மறையீட்டியல் திறவுகோல்கள் ஒரே வகையாக இருக்கலாம் அல்லது திறவுகோல்களுக்கு இடையே மிகச் சிறிய வேறுபாடு காணப்படலாம். நடைமுறையில் இந்த மறையாக்கல் திறவுகோல்களைப் பயன்படுத்தி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிநபர்கள் தங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களை இரகசியமாக பராமரிக்க முடியும்.[1] சமச்சீர் திறவுகோல் வழிமுறையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் இரண்டு தரப்பும் கட்டாயம் ஒரே வகையான திறவுகோல்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், இது பொது திறவுகோல் மறையாக்கலுடன் ஒப்பிடும் போது சமச்சீர் திறவுகோல் வழிமுறையின் முக்கிய குறைபாடு ஆகும்.[2]

ஒரே வகையான திறவுகோல்கள் பயன்படுத்தப்படும்

சமச்சீர் திறவுகோல் வழிமுறையின் வகைகள் 

தொகு
 
தொடர் மறையீட்டுக்குறி (Stream cipher)

சமச்சீர் திறவுகோல் மறையாக்கலை தொடர் மறைக்குறியீடு மற்றும் தொகுதி மறைக்குறியீடு என் இருவகைப் படுத்தலாம்.[3]

  • தொடர் மறைக்குறியீடு மூலம் ஒரு செய்தியிலுள்ள தரவுகளை ஒரே நேரத்தில் மறையாக்கம் செய்யமுடியும்
  •  
    தொகுதி மறைக்குறியீடு(Block cipher)
    தொகுதி மறைக்குறியீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான பிட்ஸ்கள் ஒரு தனித்தொகுதியாக எடுக்கப்பட்டு மறையாக்கலுக்கு உட்படுத்தப்படும்.இங்கு செய்தியை பொறுத்து தொகுதியின் அளவுகள் வேறுபாடும். பொதுவாக 64 பிட்ஸ் கொண்ட தொகுதிகள் பயன்படுத்தப்படும்.The Advanced Encryption Standard (AES) வழிமுறை NIST ஆல் December 2001 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு GCM தொகுதி மறைக்குறியீடு முறையில் 128-bit blocks. பயன்படுத்தபடுகிறது.

செயற்படுத்தல்

தொகு

பிரபலமான சமச்சீர் திறவுகோல் வழிமுறைகளுக்கு உதாரணங்கள் :- wofish, Serpent, AES (Rijndael), Blowfish, CAST5, Kuznyechik, RC4, 3DES, Skipjack, Safer+/++ (Bluetooth), and IDEA.[4][5]

சமச்சீர் மறைகுறியீடுகளின் அடிப்படையில் மறையீட்டியலின் மூலங்கள்

தொகு

சமச்சீர் மறைக்குறியீடுகள் மறையாக்கலுக்கு மேலதிகமாக மறையீட்டியலின் மூலங்களை அடைவதற்கு பயன்படுத்தபடுகிறது.

ஒரு செய்தியை மறையீடியலுக்கு உட்படுத்தும் போது செய்தி மாற்றமடையாது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.ஆகவே மறைஈடியலின் போது செய்திக்குரிய அங்கீகார குறியீடு மறைக்குறியீட்டு செய்தியுடன் சேர்க்கப்படுவதன் மூலம் பெறுனரால் மறையீட்டியலின் பொது மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும்.செய்தி அங்கீகாரக் குறியீடுகளை சமச்சீர் மறைக்குறியீடுகளில் இருந்து தருவித்துக்கொள்ள முடியும்.

இருந்த போதும் சமச்சீர் மறைக்குறியீட்டினை மறுப்பின்மை நோக்கங்களுக்காக பயன்படுத்தமுடியாது ISO/IEC 13888-2 standard. இனைப் பார்க்க.

தொகுதி மறைகுறியீட்டின் இன்னொரு பிரயோகம்  hash functions ஐக்  கட்டமைத்தல் ஆகும். இதைப் போன்ற வேறுபல முறைளை  விரிவாக அறிய இதனை way compression function சொடுக்குக.

சமச்சீர் மறைகுறியீட்டின் உருவாக்கம்

தொகு

பல நவீன தொகுதி மறைகுறியீடுகளின் உருவாக்க மூலங்கள் Horst Feistel. ஆல் முன்மொழியப்பட்டுள்ளது. Feistel இன் உருவாக்கங்கள் நேர்மற்றத்தக்க செயல்பாடுகளுக்கே பொருந்தும்.மற்றைய செயல்பாடுகளுக்கு பொருந்தாது.

சமச்சீர் மறைக்குறியீடுகளின் பாதுகாப்பு

தொகு
 
Linear cryptanalysis

சமச்சீர் மறைக்குறியீடுகள் கடந்த காலங்களில் இவற்றால்   known-plaintext attacks, chosen-plaintext attacks, differential cryptanalysis and linear cryptanalysis பாதிக்கப்பட்டிருக்கின்றன. செயல்பாடுகளை உருவாகும் போது மேலதிக அக்கரி எடுப்பதன் மூலம் வெற்றிகரமான தாக்குதல்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

திறவுகோல் தருவிப்பு 

தொகு

சமச்சீரற்ற மறைக்குறியீட்டின் திறவுகோல் பரிமாற்றத்தின் போதும் ,சமச்சீர் மறைக்குறியீட்டின் திறவுகோல் தருவிப்பின் போதும்  pseudorandom key generators  எப்பொழுதும் பயன்படுத்தப்படும். இருந்தபோதும் இந்த தருவிப்பு முறைகளில் உள்ள எழுந்தமானமான குறைபாடுகள் கடந்தகாலங்களில் மறையீட்டியலின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தின.

தலைகீழ் மறைக்குறியீடு

தொகு

மறையீட்டியலில் ஒருவர் சாதாரண செய்தியை உட்புகுத்தி மறையாக்கப்பட்ட செய்தியையும், மறையாக்கப்பட்ட செய்தியை உட்புகுத்தி சாதாரண செய்தியையும் ஒரே இடத்தில் பெறுவதனை தலைகீழ் மறைக்குறியீடு என அழைக்கப்படும்.தலைகீழ் மறைகுறியீடுகளுக்கான உதாரணங்கள் சில:- 

  • Beaufort cipher
  • Enigma machine
  • ROT13
  • XOR cipher
  •  
    Bellaso reciprocal table IOVE 1564
    Vatsyayana cipher

மேற்கோள்கள்

தொகு
  1. Delfs, Hans & Knebl, Helmut (2007). "Symmetric-key encryption". Introduction to cryptography: principles and applications. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540492436.
  2. Mullen, Gary & Mummert, Carl (2007). Finite fields and applications. American Mathematical Society. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780821844182.
  3. Pelzl & Paar (2010). Understanding Cryptography. Berlin: Springer-Verlag. p. 30.
  4. Ayushi (2010). "A Symmetric Key Cryptographic Algorithm". International Journal of Computer Applications 1-No 15. http://www.ijcaonline.org/journal/number15/pxc387502.pdf. 
  5. Roeder, Tom. "Symmetric-Key Cryptography" (in ஆங்கிலம்).