சமயநெறி ஆறு

சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் மணிமேகலை. இதில் 30 காதைகள் உள்ளன. அவற்றில் 27ஆவது காதையில் ஆறு வகையான சமயநெறிகளைப்பற்றி விளக்கமான செய்திகள் உள்ளன.

மணிமேகலை பௌத்த சமயத்தவள். மணிமேகலை சோழநாட்டுக் காஞ்சிபுரத்திலிருந்து சேரநாட்டு வஞ்சிமாநகருக்குச் செல்கிறாள். அங்குச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு அமைத்த படிமத்தைக் கண்டு கதறி அழுகிறாள். கண்ணகி சிலை பேசுகிறது. புத்தனின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. தாயின் சொற்படி மாற்றுருவம் கொண்டு சமயக் கணக்கர்தம் திறம் கேட்கிறாள். தன் சமயமல்லாத ஐந்து சமயங்களின் திறத்தை அறிந்துகொள்கிறாள்.

மணிமேகலை நூல் காட்டும் 6 சமயநெறிகள்தொகு

சமயங்களும் அவற்றைத் தோற்றுவித்த முதல்வனும்

  1. உலோகாயதம் - பிருகற்பதி
  2. பௌத்தம் - சினன்
  3. சாங்கியம் - கபிலன்
  4. நையாயிகம் - அக்கபாதன்
  5. வைசேடிகம் - கணாதன்
  6. மீமாம்சம் - சைமினி

சேந்தன் திவாகம்தொகு

சேந்தன் திவாகரம் என்பது ஒரு நிகண்டுநூல். இது வைசேடிகம், நையாயிகம், மீமாம்சை, ஆருகதம், பௌத்தம், பிரதிலோகாயிதம் என்று 6 சமயங்களைக் குறிம்பிடுகிறது. இந்த நிகண்டுநூல் மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயநெறி_ஆறு&oldid=2521231" இருந்து மீள்விக்கப்பட்டது