சமவெப்பச் செயல்முறை
வெப்பவியக்கவியலில் சமவெப்பச் செயல்முறை (isothermal process) என்பது தொகுதியின் வெப்பநிலை மாறாது, தொகுதியில் நிகழும் வெப்பவியக்கவியல் மாற்றமாகும் (ΔT = 0). இது பொதுவாக தொகுதியானது வெளியிலுள்ள வெப்பத் தேக்கத்துடன் தொடுகையிலிருக்கும் போது நிகழ்கிறது. இந்த மாற்றம் தொகுதியின் வெப்பநிலையை தேக்கத்தின் வெப்பநிலைக்குச் சமனாக வெப்பப் பரிமாற்றத்தின் மூலம் மாற்றுவதற்காக போதுமானளவு மெதுவாக நிகழ்கிறது. இதற்கு நேர்மாறாக வெப்பஞ்சேரா செயல்முறையில் தொகுதியிலிருந்து சுற்றுப்புறத்துடன் எவ்விதமான வெப்பப் பரிமாற்றமும் நிகழாது (Q = 0), அதாவது சமவெப்பச் செயல்முறையில் ΔT = 0, Q ≠ 0 அதேவேளை வெப்பஞ்சேரா செயல்முறையில் ΔT ≠ 0, Q = 0.
வளிமம் மிகவும் மெதுவாக விரிவடையும் போது (சுருங்கும் போதும்) வெப்பநிலை குறைந்து கொண்டிருந்தாலும், சுற்றுச் சூழலிலிருந்து வெப்பத்தினைப் பெறுவதால் வெப்பநிலை மாறாது. இப்படிப்பட்ட விரிவு வெப்பநிலைமாறா விரிவு (isothermal expansion) எனப்படும்.