சமிதா சென்
சமிதா சென் (Samita Sen) ஓர் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார்.[1] முன்னர் கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பித்த இவர், 2018 முதல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பேரரசு மற்றும் கடற்படை வரலாற்றுத் துறையின் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசென், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். [2] பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பயின்றார், 1992 இல் தத்துவத்தில் "வங்காள சணல் தொழிலில் பெண்கள் தொழிலாளர்கள், 1890-1940: இடம்பெயர்வு, தாய்மை மற்றும் போர்க்குணம்" எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.[3][4]
கல்வி
தொகுசென் 1990 மற்றும் 1994 க்கு இடையில் கேம்பிரிச்சில் உள்ள திரித்துவக் கல்லூரியில் ஆய்வுதவித் தொகையினைப் பெற்றார். [5] 1994 முதல் 2018 வரை, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிப்பையும் கற்பித்தார். [3] இவர் 2016 முதல் 2018 வரை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இடைநிலை ஆய்வுகள் பீடத்தின் தலைவராக இருந்தார் [3] கூடுதலாக,2013 முதல் 2015 வரை டையமண்ட் ஹார்பர் மகளிர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார். [3]
1 அக்டோபர் 2018 முதல், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பேரரசு மற்றும் கடற்படை வரலாற்றின் பேராசிரியராக இருந்து வருகிறார் [6] இது திரித்துவக் கல்லூரியின் சகோதரக் கல்லூரியாகும். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Present Board Members of CRG". mcrg.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Samita Sen". பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Professor Samita Sen" (in ஆங்கிலம்). University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019."Professor Samita Sen". Faculty of History. University of Oxford. Retrieved 15 March 2019.
- ↑ Sen, Samita (1992). Women workers in the Bengal jute industry, 1890-1940: migration, motherhood and militancy. E-Thesis Online Service (Ph.D). The British Library Board. எண்ணிம ஆவணச் சுட்டி:10.17863/CAM.19970. Archived from the original on 18 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
{{cite thesis}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Education and the Disprivileged: Nineteenth and Twentieth Century India. Orient Blackswan.
- ↑ "Vacancies, appointments, etc. - Cambridge University Reporter 6515". பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Master & Fellows". பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.