சமிம் தாரிக்கு

உருது மொழி எழுத்தாளர்

சமிம் தாரிக்கு (Shamim Tariq) ஒர் இந்திய அறிஞரும் கட்டுரையாளரும் ஆவார். வாரணாசியில் 1952 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். மும்பை அஞ்சுமன்-இ-இசுலாமில் உள்ள கரிமி நூலகத்தின் இயக்குநராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு தன்னுடைய பதவியிலிருந்து இவர் விலகினார். சூஃபி சிந்தனை மற்றும் வேதாந்தத்தின் கொள்கைகளை பகுப்பாய்வு செய்யும் அவரது தத்துவ ஆய்வு நூலான தசாவ்வுஃப் அவுர் பக்தி 2015 ஆம் ஆண்டு உருதுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றது. இரண்டு மரபுகளுக்கு இடையே உள்ள பொதுவான தன்மைகள் மற்றும் இரக்கம், நீதி, அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் செய்தியை இந்த படைப்பு விவரிக்கிறது. இவரது பேச்சுகளை அவரது தனி அலைவரிசையில் கேட்கலாம்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Sahitya honour for Dogri, Punjabi writers". Tribune. 2014-12-19. http://www.tribuneindia.com/news/nation/sahitya-honour-for-dogri-punjabi-writers/172403.html. பார்த்த நாள்: 2015-12-24. 
  2. "Kulkarni for promotion of Urdu to bring India, Pak closer". India Today. March 15, 2016. https://www.indiatoday.in/pti-feed/story/kulkarni-for-promotion-of-urdu-to-bring-india-pak-closer-573978-2016-03-15. 
  3. Devapriya Roy (February 21, 2016). "A reader's guide to the 24 books that have won the Sahitya Akademi awards". Scroll.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிம்_தாரிக்கு&oldid=3614002" இலிருந்து மீள்விக்கப்பட்டது