சமுச்சய உவமையணி
சமுச்சய உவமையணி என்பது உவமையணி வகைகளுள் ஒன்றாகும்.உவமிக்கப்படும் பொருள் உவமையோடு ஒரு பண்பில் மட்டும் ஒப்பாகாமல் இதனாலும் ஒக்கும் என வருவது சமுச்சய உவமையாகும்.
(சமுச்சயம்- இரண்டு முதலியவற்றின் கூட்டம்.)
சான்று:
- அளவே வடிவொப்ப தன்றியே பச்சை
இளவேய் நிறத்தானும் ஏய்க்கும்- துளவேய்
கலைக்குமரி போர் துளக்கும் காரவுணர் வீரம்
தொலைக்குமரி ஏறுகைப்பான் தோள்.
விளக்கம்:
அளவு வடிவு ஒப்பதன்றி நிறாத்தானும் ஏய்க்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது சமுச்சய உவமையாயிற்று. சமுச்சய உவமையை வீர சோழியம் 'உம்மை உவமை' எனக் கூறுகிறது.
உசாத்துணை
தொகுதா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968