சமூகத் தகுதிநிலை
சமூகத் தகுதிநிலை (Social status) என்பது, சமூகத்தில் ஒரு தனியாள் அல்லது ஒரு குழுவின் தகுதி அல்லது நிலையைக் குறிக்கும். தகுதிநிலை இரண்டு வழிகளில் முடிவுசெய்யப்படலாம். ஒருவர் தன்னுடைய சாதனைகளால் சமூகத் தகுதிநிலையைப் பெறமுடியும், இது "முயன்றுபெற்ற தகுதிநிலை" எனப்படும். மாற்றாக, ஒருவர் அவரது பிறப்புரிமையால் சமூகத்தின் ஒரு குறித்த படிநிலையில் வைக்கப்படலாம், இது "பிறவிசார் தகுதிநிலை" ஆகும். இவற்றைவிட உள்ளார்ந்த தகுதிநிலை என்பது, நமது உடலில் அமைந்த இயற்பிய இயல்புகளால் உருவாவது. இத்தகுதிநிலை அழகு, ஊனம், உயரம், உடற்கட்டு போன்றவற்றால் கிடைப்பது. ஒரு குறித்த நேரத்தில், ஒரு தனியாளுக்கு முக்கியமான தகுதிநிலை, முதன்மைத் தகுதிநிலை எனப்படுகின்றது.[1][2]
காரணிகள்
தொகுபிறவிசார் தகுதிநிலை என்பது ஒருவர் பிறக்கும் போதே கிடைக்கும் தகுதிநிலை என வரைவிலக்கணம் கூறலாம். எல்லாச் சமூகங்களிலும் காணப்படக்கூடிய பிறவிசார் தகுதிநிலைகளுக்கான அடிப்படைகளாக, பால், இனம், இனக்குழு, குடும்பப் பின்னணி என்பன அமைகின்றன. முயன்றுபெற்ற தகுதிநிலை என்பது, ஒருவர் தனது வாழ்க்கைக் காலத்தில் தன்னுடைய அறிவு, ஆற்றல், திறமை, விடாமுயற்சி போன்றவற்றின் விளைவாகப் பெறுவது. பதவி என்பது பிறவியாலோ, முயற்சியாலோ கிடைக்கக்கூடிய ஒரு தகுதிநிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவர் உகந்த அறிவையும், திறமையையும் பெறுவதன் மூலம் குறித்த பணியின் உயர்நிலைக்குச் செல்ல முடியும். இது அவரது சமூக அடையாளத்தை உருவாக்கும். சமூகப் படிநிலையைக் குரலினூடாகத் தெரிவிக்கவும், அறிந்துகொள்ளவும் முடியும்.[3]
வெவ்வேறு சமூகங்களில் தகுதிநிலை
தொகுசில சமூகங்களில் சாதி தகுதிநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகப் படிநிலையில் சாதிகள் வெவ்வேறு மட்டங்களில் இருப்பதால் உயர்ந்த மட்டங்களில் இருக்கும் சாதிகளின் உறுப்பினர்கள் உயர்ந்த சமூகத் தகுதிநிலையையும், கீழ் மட்டங்களில் உள்ள சாதிகளைச் சேர்ந்தோர் குறைவான சமூகத் தகுதிநிலையையும் பிறப்பிலேயே பெறுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Robert Brym; John Lie (11 June 2009). Sociology: Your Compass for a New World, Brief Edition: Enhanced Edition. Cengage Learning. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-495-59893-3.
- ↑ Ferris, Kelly, and Jill Stein. "The Self and Interaction." Chapter 4 of The Real World: An Introduction to Sociology. W. W. Norton & Company Inc, Dec. 2011. Accessed 20 September 2014.
- ↑ Ko, S.J.; Sadler, M.S.; Galinsky, A.D. (2015). "The Sound of Power: Conveying and Detecting Hierarchical Rank Through Voice". Psychological Science 26 (1): 3–14. doi:10.1177/0956797614553009.