சமூகப் பொறி

ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் தொலைநோக்குப் பார்வையின்றி தனிப்பட்ட உடனடி ஆதாயத்துக்காக செயல்பட்டு அதன் விளைவாக நீண்ட காலப் பலன்களை இழப்பார்கள் எனின் அவர்கள் ஒரு சமூகப் பொறியில் (social trap) சிக்கியுள்ளனர் எனப்படும். இந்நிலைக்கான எடுத்துக்காட்டுகள்: அளவுக்கு அதிகமாக மீன்பிடித்து மீன் வளங்கள் வற்றிப்போதல், கால்நடைகளை புல்வெளிகளில் அதிக நேரம் மேயவிட்டு மேய்ச்சல் வெளிகளைக் காலி செய்தல், மின் பற்றாகுறை நிலவும் வெப்பம் மிகுந்த காலங்களில் அதிகளவில் மின் சாதனங்களைப் பயன்படுத்தி பெரும் மின்வெட்டு ஏற்படுத்துதல் போன்றவை.

”சமூகப் பொறி” என்ற பெயர் முதன் முதலில் 1973 அமெரிக்கன் சைக்காலஜிஸ்ட் ஆய்விதழில் ஜான் பிளாட் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றது. பிளாட்டும் பிற உளவியலாளர்களும் முன்பு கேரட் ஹார்டின் அறிமுகப்படுத்திய பொதுமங்களின் அவலம் என்ற கோட்பாட்டினை மேலும் விரிவாக்கினர்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Platt, J. (1973). "Social Traps". American Psychologist 28 (8): 641–651. doi:10.1037/h0035723. 
  2. Cross, J. G.; Guyer, M. J. (1980). Social Traps. Ann Arbor: University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-472-06315-4. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  3. Hardin, G. (1968). "The Tragedy of the Commons". Science 162 (3859): 1243–1248. doi:10.1126/science.162.3859.1243. பப்மெட்:5699198. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகப்_பொறி&oldid=3950784" இலிருந்து மீள்விக்கப்பட்டது