சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் (நூல்)

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்[1] எசு. இரத்தினம் எழுதிய நூலாகும்.

நூலாசிரியர் தொகு

எசு. இரத்தினம்[2], சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஆவார்.

பதிப்பு விவரங்கள் தொகு

இந்நூலினை, நியூ செஞ்சுரி புக் அவுசு[3] வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதற் பதிப்பு அக்தோபர் 2009 இல் வெளி வந்தது, பக்கங்கள் 175.

நூலின் அறிமுகவுரை தொகு

இந்நூலின் அறிமுகவுரையை நூலாசிரியரே எழுதியுள்ளார். இந்நூல் சமூகவியல் துறை சார்ந்த மாணவர்களின் ஆய்வுமுறைக் கல்விக்கான நூல் என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் உள்ளடக்கம் தொகு

இந்நூலில் பதினேழு இயல்கள் உள்ளன. கல்லூரி, பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சமூகவியல் மாணவர்கள் எவ்வாறு தங்கள் பாடத்திட்டம் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார்.

நூலாசிரியர் பின்வரும் இயல் வகைமையின்படி நூலை விளக்கியுள்ளார்,

  1. ஆய்வு முறைமையில் இயல்புகளும், முக்கியத்துவமும்,
  2. ஆய்வுகளின் வகைகள்,
  3. ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம்,
  4. ஆய்வுத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தல்,
  5. சமுதாய ஆய்வுகளில் கோட்பாடுகளும் உண்மைகளும்,
  6. கருதுகோள் உத்தேச முடிவு- புனைகோள்,
  7. ஆய்வு வடிவமைப்பு,
  8. கூறு வடிவமைப்பு,
  9. விவரம் திரட்டுதல்
  10. அளவை நுட்பங்கள்,
  11. விவரங்களை முறைப்படுத்துதலும் பகுப்பாய்வு செய்தலும்,
  12. விவரங்களை பகுப்பாய்வு செய்தலும், பொருள் அறிதலும்,
  13. ஆய்வறிக்கை தயாரித்து அளித்தல்,
  14. துணை நூற்பட்டியல்
  15. சுருக்க விளக்கங்கள்,
  16. அடிக்குறிப்புகள்,
  17. கணிப்பொறி ஆய்வுகளில் கணினியின் பங்கு.

ஒவ்வொரு இயலிலும் அதன் துணைத் தலைப்புகளிலும் ஆசிரியர் சான்றுகளுடன் சமூகவியல் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான அடிப்படை விவரங்களை வழங்கியுள்ளார்.

மேள்கோள்கள் தொகு

  1. எசு. இரத்தினம், 2009, சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள், சென்னை: நியூ செஞ்சுரி புக் அவுசு
  2. மேலது, முகப்புப் பக்கம்
  3. நூல் உலகம் வலைதளத்தில் நூலறிமுகம்