சமையல் நூல்

சமையல் கலையை விளக்கும் நூல் ஒன்றினைச் சங்க இலக்கியம் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. 'பனிவரை மார்பன்' எனப் போற்றப்பட்ட ஒருவன் இந்த நூலை இயற்றியவன். ஓய்மானாட்டை ஆண்ட அரசவள்ளல் தன்னை நாடி வந்தவர்களுக்கு இந்தச் சமையல் நூலில் குறிப்பிட்ட வகை வகையான உணவுப் பண்டங்களை வழங்கினானாம். [1]

சமையல் கலை வல்லுநனை மதுரைக்காஞ்சி வாலுவன் என்று குறிப்பிடுகிறது,[2]

மேற்கோள்

தொகு
  1. கா எரி ஊட்டிய கவர் கணைத் தூணிப்
    பூ விரிக் கச்சைப் புகழோன் தன்முன்
    பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
    பனுவலின் வழாப் பல்வேறு அடிசில் - சிறுபாணாற்றுப்படை 238-241
  2. அஞ்சுவந்த போர்க்களத்தான்
    ஆண்டலை அணங்கு அடுப்பின்
    வயவேந்தர் ஒண்குருதி
    சினத்தீயின் பெயர்பு பொங்க
    தெறல் அருங் கடுந் துடுப்பின்
    விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
    தொடித்தோள் கைத் துடுப்பாக
    ஆடுற்ற ஊன்சோறு
    நெறி அறிந்த கடிவாலுவன் - மதுரைக்காஞ்சி 29-36
    தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் பகைவரைக் கொன்று சோறாக்கிய 'கடிவாலுவன்' என இங்குக் குறிப்பிடப்படுகிறான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமையல்_நூல்&oldid=1196595" இலிருந்து மீள்விக்கப்பட்டது