சம்பத்திய உய்கே
சம்பத்திய உய்கே (Sampatiya Uikey)(பிறப்பு 4 செப்டம்பர் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடித் தலைவர் ஆவார். 31 சூலை 2017 அன்று, மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் மறைவால் நடைபெற்ற இடைத்தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவரது பதவிக்காலம் 29 சூன் 2022 அன்று முடிவடைந்தது.
மத்திய பிரதேச மாநிலம், மண்டலா மாவட்டத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராகவும் சம்பத்திய உய்கே இருந்துள்ளார்.[2]
சம்பத்திய உய்கே சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சி 58 உறுப்பினர்களுடன் மாநிலங்களவையில் மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது. இந்தியத் தேசிய காங்கிரசை ஒரு இடத்தில் முந்தி, சம்பாத்திய உய்கே 4 ஆகத்து 2017 அன்று மூத்தோர் சபையின் உறுப்பினராகப் பதவியேற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "भाजपा उम्मीदवार सम्पतिया उइके राज्यसभा के लिए निर्वरिोध चुनी गई". Navbharat Times.
- ↑ "BJP's Sampatiya Uike elected unopposed in Rajya Sabha bypoll from Madhya Pradesh". 31 July 2017.
- ↑ "BJP becomes largest party in Rajya Sabha, surpasses Congress". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017.