சம்முடி பாலசுப்பிரமணியம்

இந்திய விளையாட்டு வீரர்

சம்முடி பாலசுப்பிரமணியம்(Sammudi Balasubramaniam) என்பவர் ஒர் இந்திய விளையாட்டு வீரர் ஆவார். சம்முடி அனைவராலும் பாலா என அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் தடகள வீரராக நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போன்ற விளையாட்டுகளைச் சிறப்பாக விளையாடினார்.[1] ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றவர். 1982 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்று தடம் பதித்தார். இப் போட்டியில் தன்னுடைய கடைசி முயற்சியில் 16.14 மீட்டர் தூரம் தாண்டி தன் திறமையை வெளிக்காட்டினார்.

சம்முடி 2016 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்கு புனிதப்பயணம் செல்லும் வழியில் தவறி விழுந்து காயமடைந்தார்.[1] இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இவருடைய மகன்கள் வினோத் மற்றும் பிரதீப் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள மாணவர்களாக பயிற்சி பெறுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Hindu : Sport : Sammudi Balasubramaniam dead". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.