சம உயரக் கோடுகள்

கடல் மட்டத்திற்கு மேல் உயரே ஒரே உயரத்தில் இருக்கும் பல்வேறு இடங்களை இணைக்கும் கோடுகளே சம உயரக் கோடுகள் எனப்படும் கடல் மட்டத்திலிருந்து 0 மீட்டர் உயரத்தைக் குறிக்கும் கடற்கரை ஓரக் கோட்டை இதற்கு சிறந்த உதாரணமாகும். மேப்புகளில் இட உயரப் புள்ளிகளை குறித்து, பின் வேண்டிய இடைவெளியில் (CONTOUR INTERVAL) அப்புள்ளிகளின் துணைக் கொண்டு சம உயரக் கோடுகள் வரையப்படுகின்றன.

சமஉயரக்கோட்டு இடைவெளி மேப்பின் அளவைக்குத் தக்கசாறும் மேப்புக் காட்டும் இடத்திற்குத் தக்கவாறும் அமையும். சமஉயக்கோடுகளின் மதிப்பு அக்கோடுகளின் மேலேயோ இடையேயோ கொடுக்கப்பட்டிருக்கும்

சான்று

தொகு
தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் சென்னை 600 006 (மேல் நிலை இரண்டாமாண்டு புவியியல் பாடநுால்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம_உயரக்_கோடுகள்&oldid=3498488" இலிருந்து மீள்விக்கப்பட்டது