சயனோகார்பன்

சயனைடு கொண்ட கரிமச் சேர்ம வகை

சயனோகார்பன்கள் (Cyanocarbons) என்பவை பல சயனைடு வேதி வினைக்குழுக்களை கொண்டிருக்கும் வேதிச்சேர்மங்களின் ஒரு தொகுதியாகும். ஐதரோ கார்பன்களில் இருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக சயனைடு தொகுதிகள் மாற்றீடு செய்யப்பட்டு இவை உருவாகின்றன[1], எனவே இவற்றைப் பொதுவாக கரிமச் சேர்மங்கள் என்று வகைப்படுத்துகிறார்கள். இத்தொகுதியின் மூத்த உறுப்பினராக C(CN)4 (நான்குசயனோ மீத்தேன் அல்லது கார்பன் டெட்ராசயனைடு) கருதப்படுகிறது. கரிம வேதியியலாளர்கள் பொதுவாக சயனைடுகளை நைட்ரில்கள் என்பர்.

பொதுவாக, சயனைடு ஒரு எதிர்மின்னூட்ட பதிலி ஆகும். இதனால், எடுத்துக்காட்டாக, சயனைடு-பதிலீடு செய்யப்பட்ட கார்பாக்சிலிக் அமிலங்கள் மூத்த உறுப்பினர்களை விட வலிமையுடன் இருக்க முனைகின்றன. உடனிசைவு கட்டமைப்புகள் வெளிப்படுத்தும் உள்ளடங்கா எதிர்மின் சுமையை சயனைடு குழுக்களால் எதிர்மின் அயனிகளாக நிலைப்படுத்திக் கொள்ள இயலும்.

வரையறையும் உதாரணங்களும்

தொகு

சயனோகார்பன்கள் என்பவை பல சயனைடு வேதிவினைக் குழுக்களைக் கொண்டு, வேதிப்பண்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவற்றில் ஏற்படுத்தக்கூடிய கரிமச் சேர்மங்கள் ஆகும்'[1]. சில முக்கியமான சயனோகார்பன்கள்:

  • நான்கு சயனோயெத்திலின் (Tetracyanoethylene), பல எத்தீன் வழிப்பொருட்களைப் போலல்லாமல் இது உடனடியாக ஒடுக்கமடைந்து நிலையான எதிர்மின் அயனியாக மாறும் இயல்புடையது.
  • பென்டாசயனோவளையபென்டாடையீன் (Pentacyanocyclopentadiene), C-H பிணைப்பின் அயனியாக்கும் பண்பால் இது நிலையான எதிர்மின் அயனியாக மாறும் இயல்புடையது.
  • நான்குசயனோயெத்திலின் ஆக்சைடு (Tetracyanoethylene oxide), C-C பிணைப்பின் உடனடி துண்டாதல் வினைக்கு உட்படும் ஒரு மின்கவர் எப்பாக்சைடு.
  • நான்குசயனோகுயினோயிருமெத்தேன் (Tetracyanoquinodimethane), C6H4-1,4-(C(CN)2)2, ஒரு வலிமைமிகுந்த எலக்ட்ரான் ஏற்பி
  • சயனோபார்ம் (Cyanoform) இதுவொரு முச்சயனோமெத்தேன், (NC)3CH

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Webster, Owen W. "Cyanocarbons: a classic example of discovery-driven research" Journal of Polymer Science, Part A: Polymer Chemistry 2001, volume, 40, pp. 210-221. எஆசு:10.1002/pola.10087
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனோகார்பன்&oldid=2135340" இலிருந்து மீள்விக்கப்பட்டது