சரத்சந்திர மித்ரா

சரத்சந்திர மித்ரா (Saratchandra Mitra) (15 நவம்பர் 1863-15 திசம்பர் 1938) ஒரு வங்காள நாட்டுப்புறவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இந்தியப் பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் சட்டம் பயின்றவராக இருந்தபோதும், பிற்காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் நிறுவனத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியமர்த்தப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு தொகு

சரத்சந்திரா சுதானிட்டி தாலுக்கில் உள்ள ஹோகுல்குரியா என்றும் ஊரை பூர்விகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அங்கு அவரது முன்னோரான ராம்மோகன் மித்ரா மஹ்ரத்தாக்கள் நடத்திய சோதனைகள் காரணமாக போரிஷாவில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி செல்லும் சூழல் ஏற்பட்டது. சரத்சந்திராவின் தந்தை நரசிங்கசந்திர மித்ராமற்றும் அவரது தாய் நிஸ்தாரினி தாசி ஆவர். இவரது தந்தை, ஹத்வா ராஜின் சட்ட ஆலோசகராக இருந்தார். சரத்சந்திராவின் மூத்த சகோதரர் அமுல்யச்சந்திரா இளம் வயதிலேயே இறந்துவிட்டார், சகோதரி சைலபாலா தாசி சிம்லாவைச் சேர்ந்த பூர்ணச்சந்திர சவுத்ரியை மணந்தார்.[1]

சரத்சந்திரா சாப்ராவில் உள்ள கல்கத்தா பயிற்சி நிறுவனப் பள்ளியில் 1875 காலக்கட்டத்தில் கல்வி பயின்றார். பின்னர் ஐஸ்வர்சந்த் வித்யாசாகர் அவர்களால் நிறுவப்பட்ட மெட்ரோபோலியன் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயின்றார். 1880ம் ஆண்டு கல்கத்தா நகரப் பள்ளி நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். 1885ம் ஆண்டு மெட்ரோபோலியன் நிறுவனத்தில் ஆங்கில மொழிக்கல்வியில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் 1888ம் ஆண்டு பி.எல் பட்டமும் பெற்றார்.

பணி வாழ்க்கை தொகு

சரத்சந்திரா 1889ம் ஆண்டு தந்தையின் வழிகாட்டுதல் படி சோப்ரா வழக்குரைஞர் கழகத்தில்(Bar Council) இணைந்தார். 1894ம் ஆண்டுவரை அங்கு பணிபுரிந்தார். பின்பு சட்டத்துறைப் பணிகளின் அரசிதழ் அதிகாரியாக செல்ல முயன்றார். பிப்ரவரி 1894 முதல் மார்ச்சு 1903 வரை ஹத்வா ராஜில் சர்வே மற்றும் செட்டில்மென்ட் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 1904ல் மீண்டும் சோப்ரா வழக்குரைஞர்கள் கழகத்திற்கு திரும்பினார். 1911 வரை அங்கு பணியில் இருந்தார். பின்னர் 1911ல் ஹத்வா மகாராணியால் உதவி மேலாளராக பணியில் அமர்த்தப்பட்டார். 1921ம் ஆண்டு கல்கத்தா பல்கலையில் புதிதாக உருவாக்கப்பட்ட துறையான மானுடவியல் துறையின் நிறுவனத் தலைவராகவும் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.[2]

1926ம் ஆண்டு இவரது உடல்நிலை நலிவடைந்ததாலும் பார்வை இழப்பு ஏற்பட்டதாலும் பல்கலைக்கழக பணியில் இருந்து ஒய்வு பெற்றார்.அமெரிக்கப் பயிற்சி பெற்ற பிராஜா சங்கர் குஹா என்பவர் இவரது பதவிக்கு வந்தார். எனினும் அரசு வேலை பெறுவதற்காக அவரும் பல்கலை பணியில் இருந்து விலகினார்.[1]

படைப்புகள் தொகு

பயணம், வரலாறு , நாட்டுப்புறவியல் , வாழ்க்கை வரலாறு, மானுடவியல் உள்ளிட்ட பல துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தது.1905 ஆம் ஆண்டு ஹெர்பர்ட் ரிஸ்லியின் கீழ் தொடங்கப்பட்ட இந்தியாவின் எத்னோகிராஃபிக் சர்வே மற்றும் ஜார்ஜ் கிரியர்சனின் இந்திய மொழியியல் ஆய்வு ஆகியவற்றால் இவர் ஈர்க்கப்பட்டார். அவர் தி லெஜண்ட்ஸ் ஆஃப் புத்தர் இன் இந்தோ-ஹெலனிஸ்டிக் ஆர்ட் (பாம்பேயை தளமாகக் கொண்ட இதழான ஈஸ்ட் அண்ட் வெஸ்ட், ஆகஸ்ட் 1913 இல்) போன்ற பல விஷயங்களில் எழுதினார், இது அபெர்டீனின் ஈவினிங் கெசட்டால் மதிப்பாய்வு செய்யப்பட்டது. வட பீகாரில் மேற்கொண்ட தனது பயணங்களின் போது அவர் உள்ளூர் மக்களிடமிருந்து தகவல்களை சேகரித்தார். சரத்சந்திரா ஒரு சிறந்த எழுத்தாளராக விளங்கியதோடு பம்பாய் மானுடவியல் சங்கத்தின் இதழில் கிட்டத்தட்ட 183 கட்டுரைகளை எழுதிவெளியிட்டார். மிதிக் சொசைட்டியின் காலாண்டு இதழில் 97, தேசிய இதழில் 37, கல்கத்தா, 34 மேன்-இன்-இந்தியாவில் (ராஞ்சி), 21. ஒவ்வொன்றும் ஜர்னல் ஆஃப் ஏசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால் மற்றும் ஹிந்துஸ்தான் ரிவ்யூ மற்றும் பல பல்கலைக்கழக இதழ்களில். கல்கத்தா ரிவ்யூவில் "அஸ்கியம்" என்ற புனைப்பெயரில் எழுதினார். அவர் 1895 ஆம் ஆண்டு முதல் பாம்பேயின் மானுடவியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். 1912 இல் சரத்சந்திர மித்ராவின் எழுத்துக்களை ஒரு புத்தகமாக மறுபதிப்பு செய்ய மானுடவியல் சங்கம் முடிவு செய்தது. [1] சரத்சந்திரமித்ரா பள்ளிகளில் வெளிப்புற இயற்கை வரலாற்றுக் கல்வியை ஊக்குவிப்பவராகவும் இருந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சரத்சந்திரா கயா மாவட்டத்தின் துணை நீதிபதி தினேஷ்சந்திர ரேயின் மகள் சரசிபாலா ரேயை மணந்தார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உண்டு.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Gupta, Sankar Sen (1965). Folklorists of Bengal. Life-sketches and Bibliographical Notes. Calcutta: Indian Publications. பக். 53–88. https://archive.org/stream/in.ernet.dli.2015.98610/2015.98610.Folklorists-Of-Bengal#page/n83. 
  2. Iyer, L. K. Anantakrishna (1934). "Recent Advances in Anthropology, Ethnology and Ethnography in India". Current Science 2 (6): 236–238. http://www.currentscience.ac.in/Downloads/download_pdf.php?titleid=id_002_07_0236_0239_0. 
  3. Mitra, S.C. (1911). "A plea for nature-study in Indian Schools". Calcutta Review 263: 48-64. https://archive.org/details/in.ernet.dli.2015.180403/page/n56. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்சந்திர_மித்ரா&oldid=3655111" இலிருந்து மீள்விக்கப்பட்டது