சரப்ஜித் சிங்

சரப்ஜித் சிங் (Sarabjit Singh) இவர் ஒரு இந்தியாவின் அமிர்தசரஸ் பகுதியை சார்ந்த விவசாயி. 1990 ல் பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டு இருந்தார்.[1]

கருணை மனு

தொகு

இந்திய - பாகிஸ்தான் எல்லையை கடந்து தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த அவர் எந்தவித குற்றமும் அற்றவர் என குடும்பத்தார் கோரிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

மரணம்

தொகு

அஃப்சல் குரு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலில், பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங்குக்கு இருந்த மிரட்டல்களை அடுத்து சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே 2 2013 ல் மரணம் அடைந்தார்.[2]

துக்க நிவாரணம்

தொகு

சரப்ஜித்தின் மரணத்தையொட்டி பஞ்சாபில் மூன்று நாள்கள் துக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு சார்பாக ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், இந்திய பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ரொக்கமும் அளிக்கப்படும் அரசு அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரப்ஜித்_சிங்&oldid=3243204" இலிருந்து மீள்விக்கப்பட்டது