சரல் செயற்கைக்கோள்
சரல்(SARAL or Satellite with ARgos and ALtiKa) என்பது இந்தியா, பிரான்சு ஆகிய நாடுகள் இணைந்து "சரல் அல்டிகா" என்ற திட்டத்தை சேர்ந்து உருவாக்கிய செயற்கைக்கோள். இதன் எடை 409 கிலோகிராம் ஆகும். சரல் செயற்கைக்கோளுடன் 6 வித வேறு செயற்கைக்கோளும் பி.எஸ்.எல்.வி.-சி20 ஏவுகணை மூலம் 2013 பெப்ரவரி 25 ஆம் நாள் அன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பயன்கள்
தொகு- பருவ நிலை மாறுதல்களால் கடல் மட்டத்தில் உருவாகும் மாற்றங்களை ஆய்வு செய்கிறது. துருவ பனிபடலங்களின் மாறுதல்கள் மற்றும் பல கடல் சார்ந்த தகவல்களை இந்த சாரல் செயற்கைக்கோள் மூலம் பெறப்படும்.
- சரல் செயற்கைக்கோள் மூலம் பல ஆண்டுகளுக்கு பின் கடல் மட்டம் எவ்வளவு உயரும் எனக் கணக்கிட முடியும். இதன் மூலம் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னதாக மேற்கொள்ள முடியும். கடலில் காணாமல் போகும் படகுகளை எளிதாக கண்டறிய முடியும். கடலில் மீன்வளம் பற்றிய தகவல்கள் சேகரிக்க முடியும்.