சருக்கை ரங்காச்சாரி
சருக்கை ரங்காச்சாரி (28 ஏப்பிரல் 1882–24 ஏப்பிரல் 1934) அறுவை மருத்துவர், மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆவார். பறக்கும் டாக்டர் என மக்கள் இவரை அழைத்தனர்.[1]
வாழ்க்கை வரலாறு
தொகுகும்பகோணம் பாபநாசம் அருகில் சருக்கை என்னும் சிற்றுரைச் சேர்ந்த இவரின் தந்தை கிருட்டிணமாச்சாரி ஓர் ஒப்பந்தக்காரர் ஆவார். ரங்காச்சாரி கும்பகோணம் டவுன் பள்ளியில் படித்தார்.சென்னை கிறித்தவக் கல்லூரியில் பட்டப் படிப்புக்குப் பின் 1900 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1904 இல் மருத்துவர் பட்டம் பெற்றார்.
பணிகள்
தொகு1906 இல் மருத்துவர் ரங்காச்சாரி அரசு மருத்துவ மனையில் பணியில் சேர்ந்தார். சென்னை எழும்பூர், ஐதராபாத் மயிலாடுதுறை தஞ்சை நாகப்பட்டினம் கும்பகோணம் பற்காம்புயூர் எனப் பல இடங்களில் பணியாற்றினார். சென்னை எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையில் டிபுட்டி சூப்பரின்டன்ட் பதவியை ஏற்றார் 1922 இல் அரசுப பணியிலிருந்து விலகினார். பின்னர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கென்சிங்டன் நர்சிங் ஓம் என்ற தனி மருத்துவமனையைத் தொடங்கி நடத்தி வந்தார்.
அந்தக் காலத்தில் ரோல்ஸ்ராய் மகிழுந்து வாங்கி வைத்திருந்ததும், வானுர்தி வாங்கிப் பயணம் செய்ததும், இவரைப் பறக்கும் டாக்டர் என மக்கள் அழைத்துக் கொண்டாடியதும் ரங்காச்சாரியின் சிறப்பைக் குறிக்கின்றன.