சரும நிலை (Cutaneous condition) என்பது உடலின் புறவுறைத் தொகுதியினைக் குறிப்பது ஆகும். இதில் உடல் மற்றும் தோல், முடி, நகங்கள், அத்துடன் தசை மற்றும் சுரப்பிகள் ஆகியவை அடங்கும்.[1] இவற்றின் முக்கியப் பணி யாதெனில் வெளிப்புற சுற்றுச்சுழலில் இருந்து நமது உடலினைப் பாதுகாப்பது ஆகும்.[2] நமது உடலின் புறவுறைத் தொகுதிகள்தான் நமது உடலின் பாதிப்பிற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. இவற்றுள் சில பாதிப்புகளுக்கு மட்டுமே, நாம் நமது மருத்துவரிடம் அணுகுதலை ஏற்படுத்திக் கொள்கிறோம்.[3] ஆனால், பல்லாயிரக்கணக்கான தோல் பிரச்சினைகளை நாம் தினமும் எதிர்கொள்கிறோம். இவை நோய்க்காரணிகளில், முக்கியமாகவும் அமைகின்றன. இதனால் இவற்றினை நோய்க்காரணிகளின் அடிப்படையில் பிரிப்பது சிறிது கடினம். பெரும்பாலான புத்தகங்களில் சருமநிலையின் இடத்தினைப் பொறுத்து அதாவது அவற்றின் உருவவியலினைப் பொறுத்து அவற்றைப் பிரிக்கின்றனர்.[4][5]

மருத்துவ துறையின் அடிப்படையில் சரும நிலை பற்றி ஆராயும்போது, அது தொடர்பான முக்கியத் தேவைகளாக சிலவற்றினை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சருமத்தில் பிரச்சினைகள் ஏற்பட்ட இடங்கள் (கை, கால், தலை), அறிகுறிகள், கால இடைவெளி, அதன் அமைப்பு, உருவவியல் மற்றும் அதன் வண்ணம் (சிவப்பு, நீலம், பழுப்பு, வெள்ளை, மஞ்சள்) ஆகியவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. சரும நிலை பற்றிய சிகிச்சைகளில் முக்கியமாக உயிர்தசை பற்றிய தகவல்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த தகவல்கள் ஆய்வகத் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும், அவற்றிற்கு இடைப்பட்ட தொடர்பு பற்றி ஆராயப்படும்.[6][7]

சருமநிலை – உட்புற நிலைப்பாடுகள் நடைபெறும் இடம்

தொகு

மனித சருமநிலை சுமார் 2 சதுர மீட்டர் (22 சதுர அடி) பரப்பளவினை ஆக்கிரமிக்கவல்லது. இதன் எடை சராசரியாக 4 கிலோ இருக்கும். மூன்று வித்தியாசமான அடுக்குகளால் ஆனது நமது தோலாகும். இதில் மேல்தோல் அடுக்கு, கீழ்தோல் அடுக்கு மற்றும் அடித்தோல் அடுக்கு ஆகியவை அடங்கும்.[1] அதேபோல் மனிதனின் தோல் வகைகளில் இரு வகைகள் உண்டு. அவை : உரோமங்கள் கொண்ட தோல், உரோமங்கள் அற்ற தோல். இதில் உரோமங்கள் அற்ற தோல் நமது பாதம் மற்றும் உள்ளங்கால்களில் உள்ளது. இதர இடங்களில் உரோமங்கள் கொண்ட தோல் உள்ளது.

அமைப்பியல்

தொகு

முதன்மை புண்கள்

தொகு

மக்குல் (நிறம் மாற்றும் விளைவுகள்)

தொகு

எவ்வித அழுத்தமும் மற்றும் வீக்கமும் இல்லாமல் இவை தோலின் மேற்பரப்பில் நிறத்தினை மாற்றுகின்றன. இதில் பல விதமான அளவுகள் உள்ளன. இருப்பினும் பொதுவாக இதன் அகலம் 5 முதல் 10 மில்லி மீட்டர் வரையிலான விட்டம் வரையில் அமைகிறது.[8]

இணைப்பு

தொகு

இணைப்பு என்பது பெரிய அளவிலான மக்குல் ஆகும். அதாவது ஒரு இணைப்பு என்பது 5 முதல் 10 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட மக்குலை விட பெரியதாக இருக்கும்.

பரவியுள்ள இடங்கள்

தொகு

பரவியுள்ள இடங்கள் என்பது தோலில் ஏற்படும் இந்த வகையிலான புண்கள் எவ்வாறு உடலில் பரவியுள்ளன என்பதைக் குறிக்கும். இவை உடலின் ஒரே இடத்தில் அமைந்திருக்கலாம் அல்லது உடலின் பல இடங்களில் பரவியிருக்கலாம். உதாரணமாக, தொடர்பு ஒவ்வாமை என்பது உடலில் ஏற்படும் இடத்தினைப் பொறுத்தது. உடலில் அந்தந்த பாகங்களில் உள்ள ஒவ்வாமையின் விளைவினால் இது ஏற்படும். இதில் மற்றொரு உதாரணமாக சின்னம்மை மற்றும் அக்கியினைக் கூறலாம். சின்னம்மை உடல் முழுவதும் வரக்கூடியது, அக்கி அது ஏற்படும் இடத்தினைப் பொறுத்து தொடர்புடையவையாக உருவாகக் கூடியது.

தோல் பாதுகாப்பிற்கான சில குறிப்புகள்

தொகு
  • குளிர்காலத்தில் வெப்பக் குளியல் எடுப்பதை தவிர்க்கலாம். அதிகப்படியான சூடான தண்ணீரினை உபயோகிக்கும்போது, உடலிலுள்ள ஈரப்பதம் வெகுவாக வெளியேறுகிறது. இந்த ஈரப்பதம் மனிதனின் தோலில் அமைந்து உடலுக்கும் ஈரப்பதம் வழங்கி வெளிப்புறத்தில் இருந்து உடலை பாதுகாக்கவல்லது. இவ்வாறு நடக்கும்போது உடலின் தோல் பகுதியில் வெடிப்புகள் மற்றும் உலர்ந்த தன்மை உணரப்படும். இதற்கு மாற்று வழியாக சிறிது சூடான நீரின் மூலம், குறுகிய நேரக் குளியலை எடுத்துக்கொள்ளலாம்.
  • மூக்கில் சில உரோமங்களின் அடிப்பாகம் சாதாரண வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் அந்த இடத்தினைவிட்டு நீங்குவதில்லை. அதை எவ்வாறு சுத்தம் செய்தாலும் அதன் நிலையினை மாற்றிவிடாமல் வலுவான பிணைப்பாக அமைந்து, கரும்புள்ளிகள் போன்று காட்சியளிக்கும். இவற்றினை முற்றிலும் நீக்க வேண்டுமெனில், ND YAG 1064 nm என்ற நவீன லேசர் சிகிச்சையினைப் பயன்படுத்தலாம்.
  • சிலவேளைகளில், வயது முதிர்வினைத் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது அல்லது தோலில் உள்ள புண்கள் அல்லது சில வித்தியாசமான அமைப்புகள் சரியாகும் முன்பே பல பொருட்களை அதன் மீது பயன்படுத்திப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உடலின் தோலினை மேலும் எரிச்சல் அடையச்செய்வதுடன் மட்டுமல்லாமல், சிவப்பாகவும், செதில்கள் போன்ற அமைப்பு கொண்டதாகவும் மாற்றக்கூடும். அத்துடன் நுண்ணிய வீக்கங்கள் மற்றும் உலர்ந்த தோல்பகுதியின் காரணமாக பல கோடுகள் கொண்ட அமைப்பு போன்று அவை காட்சியளிக்கும். அதுபோன்ற சமயங்களில் தோலினை சரிசெய்ய அடுத்தடுத்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, சிறிது கால இடைவெளி கொடுக்கலாம். இந்தக் கால இடைவெளியில் எத்தகைய அவசியமற்ற பொருட்களையும் பயன்படுத்தாது இருக்க வேண்டும். அதன்பின்பு பாதிக்கப்பட்ட தோல் தானாகவே அழிந்து புதியதாக உருவாகும், அதற்கான கால அவகாசத்தினைக் கொடுத்தால் மட்டும் போதுமானது.
  • கை கிரீம்கள் வழக்கமான லோஷன் பயன்பாடுகளைவிட சிறிது அதிக தடிமன் கொண்டவை. அத்துடன் அவை கைகளை மிருதுவானதாக மாற்ற அதிகப்படியான சத்துக்கள் தேவை. எனவே அத்தகைய கிரீம்களை கைகளை கழுவிய உடனோ அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்னரோ பயன்படுத்துதல் நல்லது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Miller, Jeffrey H.; Marks, James G. (2006). Lookingbill and Marks' Principles of Dermatology. Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-3185-5. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  2. Lippens, S; Hoste, E; Vandenabeele, P; Agostinis, P; Declercq, W (April 2009). "Cell death in the skin". Apoptosis 14 (4): 549–69. doi:10.1007/s10495-009-0324-z. பப்மெட்:19221876. 
  3. Lynch, Peter J. (1994). Dermatology. Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-683-05252-7.
  4. Jackson R (1977). "Historical outline of attempts to classify skin diseases". Can Med Assoc J 116 (10): 1165–8. பப்மெட்:324589. 
  5. Copeman PW (February 1995). "The creation of global dermatology". J R Soc Med 88 (2): 78–84. பப்மெட்:7769599. 
  6. Xiaowei Xu; Elder, David A.; Rosalie Elenitsas; Johnson, Bernett L.; Murphy, George E. (2008). Lever's Histopathology of the Skin. Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-7363-6.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Weedon's Skin Pathology, 2-Volume Set: Expert Consult - Online and Print. Edinburgh: Churchill Livingstone. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7020-3941-1.
  8. Wolff, Klaus Dieter; et al. (2008). Fitzpatrick's Dermatology in General Medicine. McGraw-Hill Medical. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-146690-8. {{cite book}}: Explicit use of et al. in: |author= (help)

புற இணைப்புகள்

தொகு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரும_நிலை&oldid=4170635" இலிருந்து மீள்விக்கப்பட்டது