சரூர்நகர் ஏரி
சரூர்நகர் ஏரி (Saroornagar Lake) இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஏரி. 1626 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்திலிருந்தே, 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத் விரிவடைந்தபோது இந்த ஏரியானது மிகவும் தூய்மையாக இருந்தது.[2] 99 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவில் 2003-04 ஆம் ஆண்டில் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 200 மில்லியன் (அமெரிக்க $ 3.1 மில்லியன்) செலவில் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.[3] ஏரியின் மறுசீரமைப்பிற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்த பறவைகள் பெரிய எண்ணிக்கையில் ஏரிக்குத் திரும்பின.[1] மறுசீரமைப்புக்குப் பிறகு, ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க, குடிமைப் பிரிவுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.[4] மேலும், ஏரிக்கரை அருகே அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.[5] இருப்பினும், 2009 ஆம் ஆண்டளவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வடிகட்டுதல் அலகு முறையாக செயல்படுவதை நிறுத்தியது. இதனால், வீட்டுக் கழிவுகளால் ஏரி மாசடைந்து வருகிறது.[6]
சரூர்நகர் ஏரி | |
---|---|
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா |
ஆள்கூறுகள் | 17°21′21″N 78°31′38″E / 17.35584°N 78.52714°E |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 99 ஏக்கர்கள் (40 ha)[1] |
அதிகபட்ச ஆழம் | 6.1 மீட்டர்கள் (20 அடி) |
குடியேற்றங்கள் | ஐதராபாத்து |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "HUDA gifts parks to L.B. Nagar". தி இந்து. 12 July 2007 இம் மூலத்தில் இருந்து 15 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070715145401/http://www.hindu.com/2007/07/12/stories/2007071258620300.htm.
- ↑ S. V. A., Chandrasekhar (2007). Sustainable environmental management. Daya Publishing House. pp. 22–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7035-474-1.
- ↑ "Saroornagar Lake to be developed with Rs. 20 cr.". தி இந்து. 30 August 2003 இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040105070720/http://www.hindu.com/2003/08/30/stories/2003083010600300.htm.
- ↑ M. L., Melly Maitreyi (22 September 2007). "HUDA provides facilities for immersion at four lakes". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108092616/http://www.hindu.com/2007/09/22/stories/2007092260370300.htm.
- ↑ M. L., Melly Maitreyi (3 April 2008). "Restored lakes face pollution in the year 2007 late Y.S Rajasekarreddy inaugreted 'Priyadarshini' park near the lake threat". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080407172627/http://www.hindu.com/2008/04/03/stories/2008040359960400.htm.
- ↑ Mahesh, Koride (26 May 2009). "Lakes remain polluted as STPs do not function". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103215707/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-26/hyderabad/28155181_1_stps-mld-sewage-lake-beautification-project.