சர்க்கரைப் பொடி
சர்க்கரைப் பொடி (Powdered sugar) என்பது பெரும்பாலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும், சாதாரண சர்க்கரையைப் பொடியாக அரைத்தும் சர்க்கரைப் பொடி தயாரிக்கப்படுகிறது. காபிகொட்டை எந்திரம் மூலமாகவும் எளிதாக அரைக்கப்படுகிறது.
துரிதமாக கரையும் தன்மை காரணமாக சர்க்கரைப் பொடி அதிக இடங்களில் பயன்படுகிறது. இது கேக் அலங்கரித்தல் வீட்டு உபயோகம்த்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சும் எனவே அதைத்தடுக்க மக்காச்சோள ஸ்டார்ச் அல்லது டிரைகால்சியம் பாஸ்பேட் 3 முதல் 5 சதவீதம் வரை சேர்க்கப்படுகிறது. இதனால் நுண்ணிய துகள்களுக்கிடைய உராய்வு குறைக்கப்படுகிறது.[1][2]