சர்தார் பட்டேல் அருங்காட்சியகம்
சர்தார் பட்டேல் அருங்காட்சியகம் (Sardar Patel Museum) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள சூரத் நகரத்திதில் உள்ளது, 1890 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. [1] [2] நிறுவப்பட்ட அந்நேரத்தில் இந்த அருங்காட்சியகம் வின்செசுட்டர் அருங்காட்சியகம் என்ற பெயரால் நன்கு அறியப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இப்பெயர் மாற்றப்பட்டு சர்தார் படேல் அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றப்பட்டது. [1] சர்தார் சங்கராலயா என்ற பெயராலும் அருங்காட்சியகம் அழைக்கப்படுகிறது. [1]
சர்தார் பட்டேல் அருங்காட்சியகத்தில் ஒரு கோளரங்கம், பழங்கால நினைவுச்சின்னங்கள், ஓவியங்கள், அறிவியல் காட்சிக்கூடம், அடுக்கு இருக்கை அரங்கு, கலைப்பொருட்கள் காட்சிக்கூடம், நிகழ்வரங்கம் மற்றும் உணவகம் போன்றவை உள்ளன. அரங்கத்தில் உள்ள இந்தி, குசராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கேட்பொலி வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் பழம்பொருட்கள் சர்தார் அருங்காட்சியகத்தில் உள்ளன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sardar Patel Museum Surat, Attractions of Sardar Patel Museum". www.suratonline.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-07.
- ↑ "Museum home".