சர்மாவின் உயில் புதினம்
சர்மாவின் உயில் என்பது க.நா.சு[கந்தாடை நாராயண சாமி சுப்ரமணியம்] எழுதிய முதல் நாவல். இது 1938ல் எழுதப்பட்டது.
வெளியீடு
தொகு1938ல் செலத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து இதை எழுதிவிட்டதாக அவர் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். முதலில் கலைமகள் காரியாலயம் வெளியீடாக வந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் நற்றிணை வெளியீடாக வந்துள்ளது
கரு
தொகுசிறுவயதிலேயே ஊரைவிட்டு ஓடிப்போய் கல்கத்தாவில் வாழும் கிருஷ்ணசாமி சர்மா என்பவர் எழுதும் உயிலின் கதை இது. அவர் மிகப்பெரிய சோதிடர். தன் குடும்பத்தின் மொத்த எதிர்காலத்தையும் அந்த உயிலில் கணிக்கிறார். அது அவரது அண்ணன் மகனான சிவராமன் என்ற எழுத்தாளனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே இதன் கதை. இதன் வழியாக க.நா.சு பிராமணக்குடும்பம் ஒன்று சென்றநூற்றாண்டில் எப்படி வாழ்க்கையை மெல்ல மாற்றிக்கொண்டது என்பதைக் காட்டுகிறார். மரணங்களும் பிர்சவங்களும் தொடர்ந்து நிகழும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அக்கா என்ற பாட்டியின் சித்திரம் முக்கியமானதாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.