சர்வஜன நேசன்
சர்வஜன நேசன் இலங்கையில் கொழும்பிலிருந்து 1886ம் ஆண்டு முதல் செவ்வாய்க்கிழமை தோறும் வெளிவந்த வாராந்த இதழாகும். இது பிறை நட்சத்திர முத்திரையுடன் வெளிவந்தது. பொதுவாக பிறை நட்சத்திர முத்திரை முஸ்லிம்களைக் குறிப்பிடுவதாகவே பயன்படுத்தப்பட்டாலும் இது ஒரு பொது இதழாக காணப்பட்டுள்ளது.
ஆசிரியர்
தொகு- முகைதீன்.
பணிக்கூற்று
தொகு"சாமவாரங்கள் தோறும் பிரகடனம் செய்யப்படும்". இந்தப் பணிக்கூற்றின் கீழே "ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாமைக்கு ஆழியெனப்படுவார்" என்ற திருக்குறள் வாசகம் இடம்பெற்றிருந்தது.
நோக்கம்
தொகுமுஸ்லிம்நேசம் எடுத்த முயற்சியை மரபு ரீதியான சிந்தனையாளர்கள் தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதினர். தம் நலன்களைப் பேண அவர்கள் உருவாக்கிய பத்திரிகையே சர்வஜன நேசன் என்பர். சித்திலெவ்வையின் முஸ்லிம் நேசன் இருக்கவே சர்வஜன நேசன் பிறந்ததாக இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் எம். ஐ. இ. அமீன் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்
தொகு- 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்