சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய பேரிடர் துயர் குறைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

நோக்கம்

தொகு

இயற்கையாகவும் மனிதனின் கவனக்குறைவினாலும், தீவிரவாத செயல்களாலும் ஏற்படும் இழப்புகள் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

இயற்கை பேரழிவுகள்

தொகு

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் போன்றவைகள் மூலம் ஏற்படும் பேரழிவுகளை இயற்கை பேரழிவுகள் என்று சொல்லலாம். நிலத்தின் சீற்றம் நில நடுக்கம் மற்றும் பூகம்பமாகவும் நீரின் சீற்றம் வெள்ளம்மாகவும், நெருப்பின் சீற்றம் எரிமலை சீற்றம் ஆகவும், ஆகாயத்தின் சீற்றம் ஓசோனில் ஓட்டையாக காற்றின் சீற்றம் புயல்ஆகவும் மாறி பேரழிவை ஏற்படுத்துகின்றன.

மனிதனால் ஏற்படும் பேரழிவுகள்

தொகு

அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த கற்றுக்கொன்டதன் விளைவாக மனிதத் தவறுகள் மற்றும் கவனக்குறைவுகளால் தீ விபத்து, சாலை விபத்து கட்டிட விபத்து, கப்பல், படகு விபத்துகள், மின்சார விபத்துகள் ஆகாய விமான விபத்துகள், தீவிரவாதத்தால் ஏற்படும் போர், வெடிகுண்டு அணுகுண்டு மற்றும் ஏவுகணைகள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றால் பொருளாதார மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது... இவை யாவும் மனிதனால் ஏற்படும் பேரிடராகும்.

இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை

தொகு

இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் இன்னல்களின் தன்மைகளை அறிந்து அவற்றால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை என்று அழைக்கிறோம்.

இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை

  • முன்னேற்பாடு
  • எச்சரிக்கை
  • தாக்கும் நிலை
  • காப்பாற்றும் நடவடிக்கை
  • மீட்பு நடவடிக்கை
  • புனர் வாழ்வளித்தல்
  • மறுசீர் அமைத்தல்
  • இன்னலை தவிர்க்க நீண்ட கால திட்டம்
  • திட்ட செயலாக்கம் என்னும் படிநிலைகளில் அமைகிறது.