சர் வில்பிரித் ரசல் கிரிம்வேடு

வேதியியலாளர், தாவரவியலாளர்

சர் வில்பிரித் ரசல் கிரிம்வேடு (Sir Wilfrid Russell Grimwade) என்பவர் ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். தாவரவியலாளர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் போன்ற பல்வேறு முகங்களாலும் இவர் நன்கு அறியப்படுகிறார். 1879 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி இவர் பிறந்தார். தொழிலதிபரான பிரடெரிக் செப்பர்ட்டு கிரிம்வேடு இவரது தந்தையாவார். ஆத்திரேலிய இராணுவத்தில் முதுநிலை அலுவலராக பணியாற்றிய அரோல்டு கிரிம்வேடு இவரது சகோதரர் ஆவார்.[1]

1929 ஆம் ஆண்டு கிரிம்வால்ட் வழங்கிய ஒரு உதவித்தொகை ரசல் கிரிம்வேடு பரிசை உருவாக்க பயன்படுத்தப்பட்டது, இது வனவியல் ஆய்வுக்கான உதவித்தொகையாகும். 2018 ஆம் ஆன்டு நிலவரப்படி, ஆண்டு பரிசு மதிப்பு, 40,000 டாலர் ஆகும் [2][3]. 1934 ஆம் ஆண்டு குக்கின் குடிசையை இங்கிலாந்தில் வாங்கி அதை ஆத்திரேலியாவுக்கு அனுப்பிய பின்னர் விக்டோரியாவுக்கு வழங்கினார். [4]

சர் வில்பிரித் ரசல் கிரிம்வேடு பிரித்தானியப் பேரரசின் சிறந்த மனிதர் விருதை 1935 ஆம் ஆண்டு வென்றுள்ளார். 1950 ஆம் ஆண்டு மன்னரின் பிறந்த நாள் பரிசுப் பட்டியலில் வீரப்பெருந்தகையாக இடம்பெற்றார். [5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "The Grimwades of Melbourne". Smith's Weekly (New South Wales, Australia) XXVIII (38): p. 4. 16 November 1946. http://nla.gov.au/nla.news-article240011644. பார்த்த நாள்: 16 August 2018. 
  2. "FORESTRY". The Canberra Times (Australian Capital Territory, Australia) 3 (419): p. 5. 13 February 1929. http://nla.gov.au/nla.news-article997221. பார்த்த நாள்: 16 August 2018. 
  3. "Russell Grimwade Prize worth $40,000". Forest and Wood Products Australia. Archived from the original on 2018-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-05-03.
  4. "CAPTAIN COOK'S' COTTAGE HANDED OVER". The Advertiser (Adelaide) (South Australia): p. 16. 16 October 1934. http://nla.gov.au/nla.news-article35011609. பார்த்த நாள்: 16 August 2018. 
  5. "He 'melted' the air...". The Argus (Melbourne) (Victoria, Australia): p. 5. 3 November 1955. http://nla.gov.au/nla.news-article71777817. பார்த்த நாள்: 16 August 2018. 
  6. "AUSTRALIANS WHO WERE KNIGHTED". Northern Star (New South Wales, Australia): p. 1. 8 June 1950. http://nla.gov.au/nla.news-article99098744. பார்த்த நாள்: 16 August 2018.