நெசவுத் தொழில் செய்வோர் தறியில் நாடா செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மரத்தைச் சலாமரம் என்பர். தறியின் நீளத்திற்குத் தகுந்தவாறு சராசரியாக ஏழு அடி நீளம் உடையதாக இம் மரத்தை அமைத்திருப்பர். இரண்டரை அங்குலத்திற்கு மூன்று அங்குலம் கனம் கொண்டதாக இம்மரம் இருக்கும். அரை அங்குலத்திற்கு 3 அங்குல கனம் கொண்ட தக்கை என்ற வேறொரு மரம் இச் சலாமரத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாமரம்&oldid=3598835" இலிருந்து மீள்விக்கப்பட்டது