சலிப்பு
சலிப்பு (Boredom) என்பது பொதுவாக ஒருவர் எந்த ஒரு செயலினையும் செய்ய வேண்டிய நிலை இல்லாத போது உண்டாகும் உணர்வு. பயனுள்ள செயலை செய்யும் போது வரும் திருப்தியின் எதிர்மறை என்றும் கொள்ளலாம்.
வகைகள்
தொகுமூன்று வகைகளாக சலிப்பினை பிரிக்கலாம், எனினும் எல்லாமே வேலையில்லாததாலோ கவனத்தை தன்பால் இழுப்பதற்காகவோ எழுகின்றன[1]:
- பிடித்தமான செயல்களை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால்
- பிடிக்காத செயலைச் செய்ய வலுக்கட்டாயப் படுத்தினால்
- எந்தவொரு காரணமும் இல்லாது ஒரு காரியத்தில் கவனம் செலுத்த இயலாது போகும் போது
ஆராய்ச்சிகளும் முடிவுகளும்
தொகுமனவியல் வல்லுநர்கள் இதனை ஒரு அளவுகோள் கொண்டு ஒரு மனிதன் எந்த அளவிற்கு சலிப்பாகக்கூடும் என அறிய முடியும் என்கின்றனர்[2]. கவனக்குறைப்பாட்டாலே தான் சலிப்பு ஏற்படும் என பல ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகின்றன[3]. சலிப்பும் சலிப்புருவாகும் தன்மையும் ஒருவரின் மன அழுத்தத்தின் அடையாளமாகவும் கூறுகின்றனர்[4][5][6]. பலவகையான மனம்சார்ந்த, உடல்சார்ந்த, கல்வி சார்ந்த, சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் இதற்கு வித்திடுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் முதல் பயன்பாடு
தொகுசார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) என்பவர் முதன்முறையாக "boredom" என்ற சலிப்பிற்கான ஆங்கிலச்சொல்லை உபயோகப்படுத்தியுள்ளார். பின்னர் இது பொதுவாக ஏற்கப்பட்டது[7][8].
உசாத்துணை
தொகு- ↑ Cheyne, J. A., Carriere, J. S. A., Smilek, D. (2006). "Absent-mindedness: Lapses in conscious awareness and everyday cognitive failures". Consciousness and Cognition 15 (3): 578–592. doi:10.1016/j.concog.2005.11.009. பப்மெட்:16427318. http://www.arts.uwaterloo.ca/~oops/article.php?src=yccog798. பார்த்த நாள்: 2013-04-12.
- ↑ Farmer, R., Sundberg, N. D. (1986). "Boredom proneness: The development and correlates of a new scale". Journal of Personality Assessment 50 (1): 4–17. doi:10.1207/s15327752jpa5001_2. பப்மெட்:3723312. https://archive.org/details/sim_journal-of-personality-assessment_spring-1986_50_1/page/4.
- ↑ Fisher, C.D. (1993). "Boredom at work: A neglected concept". Human Relations 46 (3): 395–417. doi:10.1177/001872679304600305. https://archive.org/details/sim_human-relations_1993-03_46_3/page/395.
- ↑ Carriere, J. S. A., Cheyne, J. A., Smilek, D. (September 2008). "Everyday Attention Lapses and Memory Failures: The Affective Consequences of Mindlessness" (PDF). Consciousness and Cognition 17 (3): 835–847. doi:10.1016/j.concog.2007.04.008. பப்மெட்:17574866. http://arts.uwaterloo.ca/~oops/publish/yccog-06-149.pdf.
- ↑ Sawin, D. A., Scerbo, M. W. (1995). "Effects of instruction type and boredom proneness in vigilance: Implications for boredom and workload". Human Factors 37 (4): 752–765. doi:10.1518/001872095778995616. பப்மெட்:8851777.
- ↑ Vodanovich, S. J., Verner, K. M., Gilbride, T. V. (1991). "Boredom proneness: Its relationship to positive and negative affect". Psychological Reports 69 (3 Pt 2): 1139–46. doi:10.2466/PR0.69.8.1139-1146. பப்மெட்:1792282.
- ↑ Oxford Old English Dictionary
- ↑ Online Etymology Dictionary