சல்பினைல் நைட்ரீன்

வேதிச் சேர்மத்தின் வகை

சல்பினைல் நைட்ரீன் (Sulfinyl nitrene) என்பது R-S(O)N என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தில் ஆக்சிசன், நைட்ரசன் ஆகிய இரண்டும் கந்தக அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு

தொகு

நிலைப்புத்தன்மையற்ற சல்பினைல் அசைடுகளிலிருந்து (R-SON3) சல்பினைல் நைட்ரீன்களை உருவாக்க முடியும். இந்த வினையில் எளிதாக வெடிப்புகளும் கணிக்க முடியாத விளைவுகளும் ஏற்படலாம்.[1][2]

ஒரு கரிமவுலோக M-R1 சேர்மத்தின் முன்னிலையில் சல்பினைல் ஐதராக்சிலமைனுடன் R–O–N=S=O என்ற பொதுவாய்பாட்டிலான சேர்மத்துடன் வினைபுரிந்து சல்பினைல் நைட்ரீன்கள் தயாரிக்கப்படுகின்றன.[1]

இயற்பியல் பண்புகள்

தொகு

சல்பினைல் நைட்ரீன்கள் எலக்ட்ரான் கவரிகளாகும்.[1]

சல்பினைல் நைட்ரீன்கள் கந்தகம் +6 ஆக்சிசனேற்ற நிலையிலும் நைட்ரசனுடன் முப்பிணைப்பும் கொண்ட ஒத்திசைவுக் கட்டமைப்பு அல்லது கந்தகம் +4 ஆக்சிசனேற்ற நிலையிலும் நைட்ரசன் +1 ஆக்சிசனேற்ற நிலையிலும் ஒற்றைப் பிணைப்பும் கொண்ட கட்டமைப்பு அல்லது கந்தகத்தின் மீது நேர்மின்சுமையும் நைட்ரசன் மீது எதிர்மின் சுமையும் உள்ள இரட்டைப் பிணைப்பு கொண்ட கட்டமைப்பிலும் உள்ளன.[1] மின்சுமைகள் பிரிந்தும் இரட்டைப் பிணைப்பும் கொண்ட ஒற்றையணு நிலையே ஆதிக்கம் செலுத்தும் நிலையாகும்.[3]

வேதிப்பண்புகள்

தொகு

சல்பினைல் நைட்ரீன்கள் நிலைப்புத்தன்மை அற்றவையாகும். தங்களுக்குள் இவை வினைபுரிந்து சல்போனைல் நைட்ரீன்கள், டைசல்பைடுகள் அல்லது பலபடிகளாகின்றன.[4]

தண்ணிருடன் வினைபுரிந்து R-SO2NH2 சேர்மத்தைக் கொடுக்கின்றன.[4]

சல்பாக்சைடுகளுடன் சல்பினைல் நைட்ரீன் வினைபுரிந்து சல்போனைல் சல்பாக்சிமைடை உருவாக்குகிறது. ஆக்சிசன் சல்பினைல் கந்தகத்துடன் இணைந்தும் மற்றும் இவற்றின் பிணைப்பு நைட்ரசனுடன் இரட்டைப் பிணைப்பால் மாற்றப்பட்டும் இவ்வினை நிகழ்கிறது..[5]

எடுத்துக்காட்டுகள்

தொகு

முப்புளோரோமெத்தில் சல்பினைல் நைட்ரீன் (CF3S(O)N) ஒரு வாயுவாக உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு மந்தவாயு அணியில் தனிமைப்படுத்தப்படுகிறது.[2]

ஒர் அசைடை சிதைப்பதன் மூலம் மெத்தாக்சிசல்பினைல் நைட்ரீனும் (CH3OS(O)N) உருவாக்கப்படுகிறது.[6]

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

சல்பினைல் நைட்ரீன்கள் சல்போனைல் நைட்ரீன்களில் இருந்து வேறுபட்டவையாகும். அவை கந்தக அணுவுடன் இணைக்கப்பட்ட இரண்டு ஆக்சிசன் அணுக்களைக் கொண்டுள்ளன.[1]

தயசேட்டு [7]அல்லது தயோனைலிமைடு ([NSO]-) [8]என்பது கார உலோக உப்புகளாக இருக்கும் ஓர் அயனி ஆகும். மும்மெத்தில்சிலில் சேர்மத்துடன் டிரை-டெர்ட்-பியூடாக்சி உலோகத்தின் வினையால் இவை உருவாகும்.[9]

KOtBu + Me3SiNSO → K[NSO] + Me3SiOtBu

NaNSO, KNSO, RbNSO, CsNSO, (Me2N)3S+NSO[10] and tris(dimethylamino)sulfonium [(Me2N)3S][NSO] salts are known.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Davies, Thomas Q.; Tilby, Michael J.; Ren, Jack; Parker, Nicholas A.; Skolc, David; Hall, Adrian; Duarte, Fernanda; Willis, Michael C. (9 September 2020). "Harnessing Sulfinyl Nitrenes: A Unified One-Pot Synthesis of Sulfoximines and Sulfonimidamides". Journal of the American Chemical Society 142 (36): 15445–15453. doi:10.1021/jacs.0c06986. பப்மெட்:32841007. 
  2. 2.0 2.1 Wu, Zhuang; Li, Dingqing; Li, Hongmin; Zhu, Bifeng; Sun, Hailong; Francisco, Joseph S.; Zeng, Xiaoqing (22 January 2016). "Gas-Phase Generation and Decomposition of a Sulfinylnitrene into the Iminyl Radical OSN". Angewandte Chemie 128 (4): 1529–1532. doi:10.1002/ange.201510105. Bibcode: 2016AngCh.128.1529W. 
  3. Wentrup, Curt (3 September 2018). "Carbenes and Nitrenes: Recent Developments in Fundamental Chemistry". Angewandte Chemie International Edition 57 (36): 11508–11521. doi:10.1002/anie.201804863. பப்மெட்:29808956. 
  4. 4.0 4.1 Maricich, Tom J.; Hoffman, Virgil L. (December 1974). "Chemistry of benzenesulfinyl azides. Reactions with sulfoxides". Journal of the American Chemical Society 96 (25): 7770–7781. doi:10.1021/ja00832a026. 
  5. Maricich, Tom J.; Madhusoodanan, Sunderesan; Kapfer, Craig A. (January 1977). "Convergence of mechanisms between sulfinyl azide and N-alkoxysulfinamide reactions". Tetrahedron Letters 18 (11): 983–986. doi:10.1016/S0040-4039(01)92808-4. 
  6. Wu, Zhuang; Liu, Qifan; Li, Dingqing; Feng, Ruijuan; Zeng, Xiaoqing (March 2017). "Flash vacuum pyrolysis of methoxysulfinyl azide: Stepwise decomposition via methoxysulfinyl nitrene". Journal of Analytical and Applied Pyrolysis 124: 610–617. doi:10.1016/j.jaap.2017.01.001. 
  7. Armitage, D. A. (?Fred?); Brand, John C. (1979). "Potassium thiazate KNSO". Journal of the Chemical Society, Chemical Communications (23): 1078. doi:10.1039/C39790001078. 
  8. Mann, S.; Jansen, M. (January 1995). "Zur Kenntnis der Alkalimetallthionylimide". Zeitschrift für anorganische und allgemeine Chemie 621 (1): 153–158. doi:10.1002/zaac.19956210128. 
  9. 9.0 9.1 Chivers, Tristram; Laitinen, Risto S (2017). "Fundamental chemistry of binary S, N and ternary S, N, O Anions: analogues of sulfur oxides and nitrogen oxido-anions". Chemical Society Reviews 46 (17): 5182–5192. doi:10.1039/C6CS00925E. பப்மெட்:28702517. http://jultika.oulu.fi/files/nbnfi-fe202001212900.pdf. பார்த்த நாள்: 2 August 2021. 
  10. Chivers, Tristram; Schmidt, Kenneth J.; McIntyre, Deane D.; Vogel, Hans J. (1 November 1989). "Spectroscopic studies of N–S–O anions: The reactions of NSO − with elemental sulphur and with S 4 N 4". Canadian Journal of Chemistry 67 (11): 1788–1794. doi:10.1139/v89-277. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1989-11_67_11/page/1788. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பினைல்_நைட்ரீன்&oldid=3939029" இலிருந்து மீள்விக்கப்பட்டது