சல்போனைல் குழு

கந்தக அணு இரண்டு இரட்டைப் பிணைப்புகளால் இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ள குழு

சல்போனைல் குழுக்கள் (Sulfonyl group) என்பவை R−S(=O)2−R′ என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. இவ்வேதி வினைக்குழுவின் வாய்ப்பாட்டில் கந்தகம் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கிடையில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் இடம்பெற்றிருக்கும். [1]:53[2] முதன்மையாக சல்போன்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு வேதி வினைக்குழுவாகவும் அல்லது அசைல் குழுக்களைப் போல சல்போனிக் அமிலத்திலிருந்து ஓர் ஐதராக்சில் குழுவை நீக்குவதால் கிடைக்கும் ஒரு பதிலியாகவும் இக்குழு பார்க்கப்படுகிறது. [1]:1470-1476

சல்போனைல் குழு இரண்டு ஐதரோகார்பன் பதிலிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு சல்போன்

சல்போனைல் குழுக்களை ஈரைசோபியூட்டைல் அலுமினியம் ஐதரைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி சல்பைடுகளாக மாற்ற இயலும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடும் இந்த ஒடுக்க வினையை நிகழ்த்தும் என்றாலும் முழுமையாக சல்போன்கள் முழுவதையும் சல்பைடாக இது மாற்றுவதில்லை. [1]:1851

கரிம வேதியியலில் −S(=O)2− குழு எந்தவொரு கார்பன் அணுவுடனும் இணைக்கப்படாமல் இருந்தால் அது சல்பியூரைல் சேர்மம் என்று அழைக்கப்படுகிறது. [3]

சல்போனைல் குழு பதிலிக்கு எடுத்துக்காட்டுகள் தொகு

சல்போனைல் குழுக்கள்:

குழுவின் பெயர் முழு பெயர் போலிதனிமக் குறியீடு எடுத்துக்காட்டு
டோசில் பாரா-தொலுவீன்சல்போனைல் Ts டோசில் குளோரைடு (பாரா-தொலுயீன்சல்போனைல் குளோரைடு)
CH3C6H4SO2Cl
புரோசில் பாரா-புரோமோபென்சீன்சல்போனைல் Bs
நோசில் ஆர்தோ'- அல்லது பாரா-நைட்ரோபென்சீன்சல்போனைல் Ns
மெசில் மெத்தேன்சல்போனைல் Ms மெசில் குளோரைடு (மெத்தேன்சல்போனைல் குளோரைடு)
CH3SO2Cl
டிரைபிலைல் டிரைபுளோரோமெத்தேன்சல்போனைல் Tf
டிரெசில் 2,2,2-டிரைபுளோரோயெத்தில்-1-சல்போனைல்
தான்சில் 5-(இருமெத்திலமினோ)நாப்தலீன்-1-சல்போனைல் Ds தான்சைல் குளோரைடு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Smith, Michael B.; March, Jerry (2007). March's Advanced Organic Chemistry (6th ed.). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-72091-1.
  2. வார்ப்புரு:Clayden
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 694–695. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்போனைல்_குழு&oldid=3894049" இலிருந்து மீள்விக்கப்பட்டது