சல்மா அக்தர்

அக்தர் சல்மா என அழைக்கப்படும் மௌசுமி அக்தர் சல்மா (Moushumi Akhter Salma[2]) என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி ஆவர். 'என்டிவி' தொலைக்காட்சியினால் 2006-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட "குளோஸ்அப் 1" எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.[3]

மௌசுமி அக்தர் சல்மா
இயற்பெயர்সালমা আক্তার
பிறப்பிடம்குசிதா மாவட்டம், வங்காளதேசம்[1]
இசை வடிவங்கள்லாலொன் கீதி, பள்ளி கீதி
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2006 முதல் தற்போது வரை

பிறப்பு

தொகு

சல்மா அக்தா் வங்காளதேசத்தின் குல்னா பிரிவின், குஷ்டியா மாவட்டத்தைச் சோ்ந்த தௌலத்பூர் தாலுக்காவின், கங்கராம்பூர் கிராமத்தில் பிறந்தார்.

இசை வாழ்க்கை

தொகு

இவர் நான்கு வயதில் தனது குருவான பவுல் ஷாபி மன்டல் என்பவரிடம் இசை பயின்றார். பராம்பரிய இசையுடன் நாட்டுப்புற இசையையும் தனது குருவிடம் பயின்றார். இவர் வாழ்க்கையில் பெரிய மாற்றம் அவரின் 12 வயதில் நிகழ்ந்தது. ' என்ரீவி' 2006 இல் நிகழ்த்திய "குளோசப் 1" (சீசன் 2 ) எனும் இசை நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் ஒருலட்சம் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.[4].

தொலைக்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டிருந்த போது அவரது முதல் தனிப்பாடலான பனியா போந்து, மற்றொரு பாடலான சைலம் ஜாரி ஆகிய இரு பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. அதே நேரத்தில், அமர் ஏக் நொயோன் என்ற அவரது பாடலும் நல்ல பெயரைப் பெற்றது.

மற்ற அனைத்து வங்காள மொழி நாட்டுப்புற பாடல்களோடு லாலோன் கீதி என்ற ஒரு வகைப் பாடலை பாடுவதில் சல்மா சிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் பகுதி பாரம்பாிய மற்றும் நவீன வங்காள மொழிப் பாடல்களையும் பாடும் திறனைக் கொண்டுள்ளார்.

சல்மா தனது மற்றொரு ஆசிரியரான உஸ்தாத் சஞ்சிப் டேவிடம் 2011 முதல் தற்போது வரை இசைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

சல்மா பல்வேறு இசை முத்திரைகளில் 11 தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டார். 30 க்கும் மேற்பட்ட கலப்பு பாடல் தொகுப்புகளிலும் பணியாற்றி உள்ளார். அவரது முதல் தனிப்பாடல் தொகுப்பு பனியா போந்து ஆகும்.

சல்மா உலகளவில் பல அசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி உள்ளார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் 2010 இல் சிபிலி சாதிக் என்பவரை திருமணம் செய்தார். இவரின் கணவர் தினச்பூர் -6 எனும் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது சிறந்த தொழிலதிபரும் ஆவார்.[2][6]. 2012 இல் இவருக்கு முதலாவது பெண் குழந்தை பிறந்தது. பெயர் சினேகா. 2016 நவம்பர் மாதத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். பின்னர் இவர் பிரிட்டனில் இருந்த் குடிபெயர்ந்த சனௌல்லா சகர் என்பவரை 31. டிசம்பர். 2018 இல் மறுமணம் புரிந்தார். இதன் மூலம் தனது இரண்டாவது மகளான சபியா நூர் என்பவரை 2019 டிசம்பரில் பெற்றெடுத்தார் [7].

சாதனைகள் மற்றும் விருதுகள்

தொகு

பச்சாஸ் - சிறந்த பெண் பாடகி விருது பெற்ற சல்மா, எஸ்.எஸ். மல்டிமீடியா என்ற தனது வழிகாட்டி நிறுவனத்தின் உதவியுடன் சல்மா தனது சொந்த இசை தயாரிப்பு நிறுவனமான ‘சல்மா மியூசிக்’ என்ற நிறுவனத்தை மார்ச் 26 அன்று தொடங்கினார்.இதற்கிடையில், அவா் தனது நிறுவனத்திற்காக ஒரு சில பாடல்களுக்கு தனது குரலில் பாடியுள்ளார். அவைகளுள் சில ‘பாலோபாஷி போண்டு டோக்’, ‘பிரிட்டர் கோர்’, ‘அவ்லா பிரேம்’, ‘போரனர் போந்து’ ஆகியவை ஆகும்

இசைத் தொகுப்பு விவரம்

தொகு
தனி ஆல்பங்கள்
ஆல்பம் ஆண்டு
பனியா போந்து 2006
போந்து அயோ அயோ 2007
போரேனர் போந்து 2008
மதிர் தாரா 2009
போந்து அய்லானா 2010
பினோடினி 2010
பிருந்தாபன் 2011
பிரெபெமர் ஜெனசா 2012
ஷாப்னோ யுரைலா 2015
அனுராஜர் கோரே 2016
மோன் மாஜி 2017

மேற்கோள்கள்

தொகு
  1. Khalid-Bin-Habib (5 January 2007). "New voices, unadulterated popularity". The Daily Star. http://archive.thedailystar.net/2007/01/05/d701051402121.htm. பார்த்த நாள்: 22 July 2017. 
  2. 2.0 2.1 Zahid Akbar (15 January 2017). "আজ-স্নেহা-আর-আমি-একই-পেশাক-পরবো"-77305 ""আজ স্নেহা আর আমি একই পোশাক পরবো"" (in bn). The Daily Star. http://www.thedailystar.net/bangla/anandadhara/"আজ-স্নেহা-আর-আমি-একই-পেশাক-পরবো"-77305. பார்த்த நாள்: 22 July 2017. 
  3. "‘মেয়ের মুখের দিকে তাকালেই শিবলিকে মিস করি’". Bhorer Kagoj. 14 January 2017 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171208003605/http://www.bhorerkagoj.net/online/2017/01/14/318995.php. பார்த்த நாள்: 22 July 2017. 
  4. "Singer Salma shows ‘unprecedented love’ to Ahmed Imtiaz Bulbul". Daily Sun. 16 February 2016. http://www.daily-sun.com/post/114448/Singer-Salma-shows-%E2%80%98unprecedented-love%E2%80%99-to-Ahmed-Imtiaz-Bulbul. 
  5. "‘Salma set to head out for London’". The Daily Srar. 20 October 2017. http://www.thedailystar.net/arts-entertainment/salma-set-head-out-london-1478845. பார்த்த நாள்: 20 October 2017. 
  6. "মেয়ের জন্মদিনে সালমা" (in bn). Prothom Alo. December 29, 2012. http://archive.prothom-alo.com/detail/news/317169. பார்த்த நாள்: July 22, 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "ফের মা হলেন সালমা". bangla.bdnews24.com. 2019-09-07. பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_அக்தர்&oldid=3622948" இலிருந்து மீள்விக்கப்பட்டது